Header Ads



மண்டையை கொஞ்சம் பரிசோதனை செய்ய வேண்டும்


தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் நடைமுறை சாத்தியமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.செவ்வாய்கிழமை திருகோணமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்  போதே இவ்வாறு தெரிவித்தார் 


அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்


தற்போது முக்கிய வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியாகி உள்ளன.அனைவரும் அது செய்வோம் இது செய்வோம் என கூறினாலும் அதை எப்படி செய்வோம் என ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே குறிப்பிட்டுள்ளது.


தேசிய மக்கள் சக்தியின்  தேர்தல் விஞ்ஞாபனம் வாசிக்க அழகாக இருக்கும் அவர்களின் மேடை பேச்சு போல. ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமற்றது.உதாரணமாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் இலவச வைத்திய பரிசோதனை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.சாதாராண வைத்திய பரிசோதனை செய்ய ஆக குறைந்தது 25000.00 இருபத்தி ஐயாயிரம் ரூபா செலவாகும்.இலங்கையில் உள்ள பெண்களுக்கு இவ்வாறு பரிசோதனை செய்ய வருடத்துக்கு எவ்வளவு செலவாகும் .அனைவருக்கும் பரிசோதனை செய்ய இலங்கை மருத்துவ மனைகளில் வசதிகள் உள்ளதா இதற்கான செலவை எவ்வாறு ஈடு செய்யப்போகிறார்கள் .இவ்வாறுதான் அவர்களின் மேடை பேச்சுக்கள் அனைத்தும் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதவை 


அனுர குமார 2022 ஆம் ஆண்டு கூறினார் சர்வதேச நாணய நிதியம்  சென்று மீண்ட நாடுகள் ஒன்றுமில்லை என. அதே அனுரதான் இன்று சர்வதேச நாணய நிதியத்துடன் பேசிச்சுவார்தை நடாத்த தயார் என தற்போது கூறுகிறார் .பொருளாதாரரத்தை பற்றி இவர்க்ளுக்கு எந்த அறிவும் இல்லை. வெளிநாட்டு தொடர்புகளும் இல்லை. டொலர் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு வழங்குவீர்கள் என கேட்தற்கு வெளிநாட்டில் உள்ள சகோதர்கள் டொலர் அனுப்புவார்கள் அதைக்கொண்டு டொலர் பிரச்சனையை  தீர்ப்போம் என கூறியவர்கள் எவ்வாறு  நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவார்கள். 


எம்மிடம் மட்டுமே சிறந்த பொருளாதார குழு உள்ளது. நாம் அன்றிலிருந்து இன்று வரை நாட்டை மீட்க சர்வதேச நாணய நிதியத்திடம்  செல்லவேண்டும் என்றே கூறுகிறோம். தேசிய மக்கள் சக்தி கூறுவதை போல் ஆட்சிக்கு வந்தபின் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை மாற்ற முடியாது .அவ்வாறு மாற்ற முடியும் என யாராவது கூறினால் அவர்களின் மண்டையை கொஞ்சம் பரிசோதனை செய்ய வேண்டும். 


உங்களுக்கு புரியும் வகையில் கூறுவதானால் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை ஒரு வீடு போன்றது எம்மால் வீட்டின் அத்திவாரத்தை உடைக்க முடியாது. ஆனால் பெரிய அறைகளை சிறிதாகவும் சிறிய அறைகளை பெரிதாகவும் மாற்ற முடியும். 


தற்போது வரிச்சுமை அனைத்தும் நடுத்தர மக்களின் தலையில் கட்டப்பட்டுள்ளது. பணக்காரர்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் ஆட்சிக்கு வந்த பின் இதை மாற்றி நடுத்தர மக்களுக்கும் வறுமை கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கும் சலுகை கிடைக்க கூடிய வகையில் அதை மறுசீரமைப்போம்.


எமது முன்னாள் தலைவரை பற்றி நாம் கதைத்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை அவர் தற்போது போட்டியில் இல்லை . அதனால்தான் அவர் தற்போது அனுரவுடன் ஒப்பந்தம் செய்து சஜித் பிரேமதாசாவை தோற்கடிக்க பார்கிறார்.அவருக்கு அவர் தோற்றாலும் பரவாயில்லை சஜித் வெற்றிபெற கூடாது. 


ரணிலுக்கும் அனுராவுக்குமான ஒப்பந்தம் என்னவென்று பலருக்கு தெரியாமல் இருக்கும் சஜித்துக்கு கிடைக்கும் சிறுபான்மை வாக்குகளை உடைத்து அநுரவை வெற்றி பெற வைக்கும் ஒப்பந்தமே அது. அதனால்தான் வடக்கில் பொது வேட்பாளர்,தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு அளித்த பின்னும் மாவை சேனாதிராஜாவை சந்தித்து வழமை போல் குழப்பத்தை உண்டு பண்ணுவது என பல வேலைகளை செய்துகொண்டு  வருகிறார் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.