இப்படிப்பட்ட அரசியலுக்காக உறவுகளை, நட்புக்களை முறித்து விடாதீர்கள்
அரசியல் வாழ் நாளில் ஓரிரண்டு முறை வந்து போகும். இன்று சண்டை பிடித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் நாளை ஒரே மேடையில் ஒன்றாகச் சேர்ந்திருப்பார்கள். இப்படிப்பட்ட அரசியலுக்காக உறவுகளை முறித்து விடாதீர்கள். நட்புக்களை முறித்து விடாதீர்கள்.
எந்த அரசியலுக்காக நாம் உறவுகளை முறித்தோமோ, அந்த அரசியல்வாதிகள் இருவரும் ஒன்றாய்ச் சேர்ந்து விடுவார்கள் ஆனால் நாம் அரசியல்வாதிக்காக முறித்த உறவை மரணிக்கும் வரைக்கும் மீளப் பெற முடியாமல் இருக்கும்.
இறைவன் அரசியல் தெரிவைப் பற்றிக் கேட்பானோ, இல்லையோ நாம் வேரறுத்த உறவு அவன் அர்ஷைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கும்.
நீங்கள் இருக்கும் ஒரு அரசியல் கொள்கையில் உங்கள் உறவினர் அல்லது நண்பர் இல்லை என்றால் அவரிடம் அரசியல் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். தேர்தல் முடிந்ததன் பின்னர் கட்டாயம் அவரின் வீட்டுக்குச் சென்று உறவைக் கொண்டாடுங்கள். அரசியலுக்காக குடும்ப உறவுகள் இறுதிவரைக்கும் சுக்கு நூறாகிப் போன சரித்திரங்கள் எங்கள் எல்லோருக்கும் தெரியும்.
தெரிந்து கொள்ளுங்கள்.
அரசியல் உலகத்திற்காக. உறவுகள் மறுமைக்காக..
Post a Comment