Header Ads



ரணிலை வெற்றிபெறச் செய்வதற்காக, மக்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர்


காலி சமனல விளையாட்டரங்கில் இன்று (18) இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆற்றிய உரை


''ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்வதற்காக காலி மக்கள் இன்று ஒன்றுபட்டு நிற்கின்றனர்.தொலைக்காட்சி விவாதங்களுக்கு சஜித் செல்வதற்குப் பயப்படுகிறார்.    ஏனென்றால் சவாலை ஏற்கும் திறன் சஜித்துக்கு இல்லை. நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போது  சவாலை ஏற்க முடியாத  ஜே.வி.பி இப்போது பரீட்சார்த்தமாக ஆட்சியைக் கோருகிறது. வேறு மாவட்டங்களில் இருந்தே அதன் கூட்டங்களுக்கு மக்கள் அழைத்து வரப்படுகின்றனர்" என்று தெரிவித்தார்.


சர்வமதத் தலைவர்கள், பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, உள்ளுர் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்த வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.