Header Ads



கடவுச்சீட்டு கொள்வனவு தீர்மானத்துக்கு தடை - நீதிமன்றம் உத்தரவு


இரண்டு தனியார் நிறுவனங்களிடமிருந்து 7 இலட்சத்து 50 ஆயிரம் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்காக கடந்த அரசாங்கத்தில் மேற்கொண்ட அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.


எபிக் லங்கா தனியார் நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனுவை பரிசீலனை


செய்ததை அடுத்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மொஹமட் லபார் தாகீரினால் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதிவரை அமுலில் இருக்கும் வகையில் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம், உரியக் கொள்வனவு நடைமுறைகளை பின்பற்றாமல் இந்த கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாகவும் இது முற்றிலும் சட்டவிரோதமானது எனவும் மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.