Header Ads



நீதிமன்றத்தை அவமதித்ததாக மைத்திரி மீது வழக்கு


நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் 27ஆம் திகதி கூடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த மனு இன்று (02) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


அப்போது, ​​பிரதிவாதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தனது கட்சிக்காரருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக சேவையாற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்ததை அடுத்து அவர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகியதாக நீதிமன்றில் தெரிவித்தார்.


அதன்படி அவர் தொடர்ந்தும் தலைவராக செயற்படவில்லை எனவும் நீதிமன்ற உத்தரவை மீறி நீதிமன்றினை அவமதிப்பு செய்யவில்லை எனவும் ஜனாதிபதியின் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.