Header Ads



எரிபொருட்களின் விலை குறைப்பு (முழு விபரம்)


மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய இலங்கை பெட்ரோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.


இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையைக் குறைக்கவுள்ளது. 
 
இதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 21 ரூபாவினால் குறைத்து 311 ரூபாவாக நிர்ணயித்துள்ளது. 
 
அதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கமைய ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 283 ரூபாவாகும். 
 
அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 
 
அதற்கமைய, அதன் புதிய விலை 319 ரூபாவாகும். அதேநேரம், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 
 
ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 377 ரூபாய் என்ற விலையிலேயே மாற்றமின்றி தொடரும் எனவும் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 
 
அதேநேரம், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தங்களுக்கு ஏற்ப லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலையை திருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது


No comments

Powered by Blogger.