வரியில்லாத வர்த்தகத் தொகுதி, கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு
இந்த வர்த்தகத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டிருக்கும் வரியில்லா வர்த்தக தொகுதி, விற்பனை நிலையங்கள், உணவகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
இதற்குள் One World, China Duty Free Group (CDFG) மற்றும் Flemingo ஆகியவை இந்த வர்த்தகத் தொகுதியில் தங்கள் செயல்பாடுகளைத் ஆரம்பித்திருப்பதன் மூலம், கொழும்பு துறைமுக நகரம், பிராந்தியத்தில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகத் தொகுதியாக பரிணமிக்கும்.
பெயர் பலகையை திரைநீக்கம் செய்து, வணிக வளாகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, கண்காணிப்பு பயணத்தையும் மேற்கொண்டார்.
துறைமுக நகரை இவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பார்க்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் அரசாங்கம் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியமையினால் இன்று துறைமுக நகரின் நிதிச் செயற்பாடுகளை தொடங்க முடிந்துள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சுமார் 100 நிறுவனங்கள் துறைமுக நகரம் குறித்து கவனம் செலுத்தியுள்ளன. அவற்றில் 74 நிறுவனங்கள் இந்த வருட இறுதிக்குள் துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வெளிநாட்டு கடன் வழங்குனர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் திருத்தமின்றி அமுல்படுத்தப்பட்டால் நாட்டுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
Post a Comment