Header Ads



நல்லதெல்லாம் நல்லறங்கள்தான்



👉 உறக்கத்தில் இருப்பவர்கள் எழுந்திருக்காதபடி, அமைதியாக கதவை மூடுவதும் அறச்செயல்தான். 


✍ உணவுத் தட்டு திறந்திருப்பதை கண்டால் மூடி வைத்து விடுவதும் அறச்செயல்தான். 


✍ சலிப்பான பேச்சாக இருந்தாலும் பேச்சாளரின் மனம் நோகாதபடி கேட்டு முடிப்பதும் அறச்செயல்தான். 


✍ தொலைபேசியில் பதிலளிக்கும்போது கனிவான குரலில் பேசி முடிப்பதும் அறச்செயல்தான். 


👉 குழந்தைகளோடு புன்னகைப்பதும், பாசமாக விளையாடுவதும் அறச்செயல்தான். 


👉 விருந்தினர்களை வீட்டுக்கு அன்போடு உபசரிப்பதும் அறச்செயல்தான். 


👉 நீ திறந்த ஒன்றை மூடிவிடுவதும், உன் கையால் விழுந்த ஒன்றை எடுத்து வைப்பதும், உன்னால் சிதறிப் போனதை சரிசெய்து வைத்து விடுவதும், நீ பயன்படுத்திய இடத்தை சுத்தம் செய்து விட்டு செல்வதும், இருந்த இடத்தை மிகச் சிறப்பாக வைத்துவிட்டு செல்வதும் அறச்செயல்கள்தான்.


👉 மாமா மாமிக்கு, சாச்சா சாச்சிக்கு, சகோதர சகோதரிக்கு, நண்பர்களுக்கு போஃன் கோல் எடுத்து சுகம் விசாரிப்பதும் அறச்செயல்கள்தான்.


👉 குடித்த தண்ணீர் பாட்டிலை, ஜூஸ் பெட்டியை, ஷாக்லோட் தாளை கண்ட இடத்தில் வீசாமல் அருகிலுள்ள குப்பைத் தொட்டியை தேடிப் போடுவதும் அறச்செயல்கள்தான்.


👉 தான் பெற்ற பயனை யாவரும் பெற பரப்புரை செய்வதும் அறச்செயல்தான். 


👉  பணம் கேட்டு, உதவி கேட்டு, அல்லது ஆலோசனை கேட்டு வந்த எவரையும் வெறுங்கையோடு திருப்பி அனுப்பாமல் இருப்பதும் அறச்செயல்தான்.


👉 நீ கண்ட குறையை அம்பலப்படுத்தாது மறைப்பதும் அறச்செயல்தான். 


👉 மரணித்த ஒருவருக்கு, நோயுற்ற ஒருவருக்கு பிரார்த்திப்பதும் அறச்செயல்தான்.


எல்லையற்ற வானம் போல, கரையற்ற கடல் போல நல்லறங்களின் வாயல்களை இஸ்லாம் திறந்து விட்டுள்ளது. 


இந்த உலகில் ஆக்ஸிஜன் எப்படி நிரம்பிக் கிடக்கிறதோ அது போன்றே அறச்செயல்களும் நிரம்பிக் கிடக்கின்றன.


நாம் நினைத்தால், எங்கள் தராசுத் தட்டை எவ்வளவு வேண்டுமானாலும் நிறைத்துக் கொள்ளலாம்.


✍ தமிழாக்கம் / imran farook


No comments

Powered by Blogger.