வீட்டுக்குள் நுழைந்து வாக்காளர் அட்டைகள் அபகரிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத 6 பேர் வீட்டில் இருந்த 3 வாக்காளர் அட்டைகளை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றுள்ளதாக நிவிதிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாட்டாளர் நிவிதிகல, இந்தோல தும்மலவத்த, தெல பிரதேசத்தில் வெறிச்சோடிய இறப்பர் தோட்டத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் எனக் தன்னை கூறிக்கொண்ட, கூலி தொழிலாளியாக வாழ்ந்து வரும் பெண் ஒருவரே முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டாளரின் வீட்டிற்கு அருகில் வீடுகள் இல்லை எனவும், அந்த வீட்டுக்குச் செல்வதற்கு வீதி இல்லை எனவும், வீட்டுக்குச் செல்ல சுமார் 2 கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போதிலும் எந்த தடயமும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment