உலக சாதனையை சமன் செய்த கமிந்து மெண்டிஸ்
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார்.
தற்போது காலியில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
வீரர் ஒருவர் முதல் 7 போட்டிகளில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை எடுத்து, பாகிஸ்தான் வீரர் ஒருவரின் உலக சாதனையை கமிந்து, சமன் செய்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் வீரரான சவுத் ஷகீல், தனது முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 50 இற்கு மேற்பட்ட ஓட்டங்களை பெற்று சாதனைப்படைத்துள்ளார்.
இந்நிலையில் கமிந்து மெண்டிஸ் தமது 04 ஆவது டெஸ்ட் சதத்தைப்பெற்ற நிலையில், அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.
Post a Comment