நடவடிக்கைககு தயாராகும் பொதுஜன பெரமுன
வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண் எம்பி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி அந்தக் கட்சியில் முதலில்: ரோஹித அபேகுணவர்தன, எஸ். எம். சந்திரேஸ்னா மற்றும் பவித்ரா தேவி வன்னியாராச்சி ஆகியோரின் கட்சி உறுப்புரிமையும், இதுவரையில் அவர்கள் வகித்த பதவிகளும் இரத்து செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கையொப்பமிட்ட கடிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கட்சியின் கருத்துக்கு மாறாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து எம்.பி.க்களுக்கும் எதிராக செயற்படுவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது
Post a Comment