Header Ads



இந்தியாவின் இளம் வயது, முதல் முஸ்லிம் பெண் நகர்மன்ற தலைவர்..




இவர் பெயர் நிதா ஸஹீர்.. வயது 26


இந்தியாவின் இளம் வயது முதல் முஸ்லிம் பெண் நகர்மன்ற தலைவர்..


மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டி நகராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் மிக இளம் வயது நகராட்சி தலைவர் எனும் பெருமை பெற்றுள்ளார் நிதா ஸஹீர்..


கடந்த முறை நடைபெற்ற கேரள உள்ளாட்சி தேர்தலில் 40உறுப்பினர் கொண்ட கொண்டோட்டி நகராட்சியில் 32 வார்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.


முதல் இரண்டரை ஆண்டுகள் முஸ்லிம் லீக் பிரதிநிதி தலைவராகவும், மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் காங்கிரஸ்  கட்சிக்கு ஒதுக்குவதாக ஒரு ஒப்பந்தம் முடிவானது.


அதனடிப்படையில் முஸ்லிம் லீக் கட்சியின் சுகறாபீவி  21/2 ஆண்டு வகித்து வந்த நகர்மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.


அந்த பதவிக்கு காங்கிரஸ் கட்சி கவுன்சிலரான நிதா ஸஹீர் அறிவிக்கப்பட்டு நடந்த தேர்தலில்  40க்கு 32 கவுன்சிலர் ஆதரவுடன் வெற்றி பெற்று தலைவராகியுள்ளார்.


இளங்கலை இயற்பியல் பட்டதாரி மற்றும் இரண்டு குழந்தைகளின் தாயான நிதா ஸஹீர், ஆசிரியை ஆக வேண்டும் என்று பி.எட் படித்து வந்த நிலையில் நகர்மன்ற தலைவர் பதவியை ஏற்றுள்ளார்..


ஆனாலும் பொதுச்சேவை பணிக்கு இடையூறு இல்லாமல் பி.எட் படிப்பை தொடரப்போவதாகவும் கூறும்  நிதா ஸஹீர் அரசியல் களத்தில் முஸ்லிம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குவார்...


- Azheem. -

No comments

Powered by Blogger.