பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு அறிவிப்பு - பணிகளுக்காக நாடு திரும்பும் பசில்
புதிய ஜனாதிபதி, பாராளுமன்றத்தை கலைத்தால் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
புதிய ஜனாதிபதியின் நியமனத்தின் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் அந்தந்த அரசியல் கட்சிகள் தனித்தனியாக கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது
வெளிநாடு சென்றுள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விரைவில் நாடு திரும்புவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
மருத்துவ பரிசோதனைகளின் பின்னர், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தலைமை தாங்க அமைச்சர் பசில் ராஜபக்ஷ விரைவில் வருவார் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment