அநுரகுமாரவை மக்கள், ஜனாதிபதியாக்கியது ஏன்..?
- லத்தீப் பாரூக் -
1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து நாட்டிற்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த சேதத்தை உணராமல்இ அதிகாரத்தைப் பெறுவதையோ அல்லது தக்கவைத்துக் கொள்வதையோ நோக்கமாகக் கொண்ட குறுகிய நோக்கு மற்றும் அழிவுகரமான இனவெறி அரசியல்இ என்பனவற்றால் வெறுப்டைந்த இந்த நாட்டு மக்கள் 2024 செப்டம்பர் 21 சனிக்கிழமையன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மார்க்சிஸ்ட் தேசிய மக்கள் கட்சியின் (என். பி. பி) தலைவர் அனுர குமார திசாநாயக்கவை ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளனர்.
மக்கள் வழங்கியுள்ள செய்தி மிகத் தெளிவானது. அரசியலைச் சுத்தப்படுத்துங்கள், நாட்டைக் கொள்ளையடித்தவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்இ பிளவுபட்ட சமூகங்களை ஒன்றிணைத்துஇ அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை நோக்கி முன்னேறுங்கள். இது தான் மக்கள் வழங்கியுள்ள மிகத்திவான செய்தி
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து 1948 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்த பிரச்சினை தொடங்கியதுஇ அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக முன்னேற தேவையான அனைத்து வளங்களாலும் இந்த நாடு ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீவு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான ஸ்திரத்தன்மயை கொண்டிருந்ததுஇ கல்வியறிவு பெற்ற மக்கள் இருந்தனர்இ சகல மட்டங்களிலும் நேர்மை மற்றும் ஒருமைப்பாடு காணப்பட்டது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக எல்லா பிரிவுகளையும் சேர்ந்தவர்கள் நல்லிணக்கத்தை கொண்டிருந்ததனர்.
அப்போது தேவைப்பட்டது என்னவென்றால், சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் மட்டுமேஇ அவர் சகல சமூகங்களையும் ஒன்றிணைத்து நாட்டில் உள்ள எல்லா சமூகங்களினதும் முன்னேற்றத்துக்காக ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி இலங்கை மக்ளை கூட்டாக முன்னேற்றப் பாதையில் வழி நடத்தக் கூடியவராக இருக்கவேண்டும் என்ற தேவை மட்டுமே இருந்த்து.
துரதிருஷ்டவசமாக இனவெறி மனநிலை அரசியலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதுஇ புதிய இலங்கை அரசாங்கம் செய்த முதல் தவறுகளில் ஒன்றுஇ ஒரு புதிய குடியுரிமைச் சட்டத்தின் கீழ்இ இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் குடியுரிமையை இரத்துச்செய்ததாகும். இந்தப் பிராந்தியத்தில் உள்ள வணிக சமூகங்களுடன் நெருங்கிய உறவுகளை கொண்டிருந்தஇ நாட்டுக்கு அதிக வருவாயைக் கொண்டு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வர்த்தன சமூகம் தீவை விட்டு வெளியேறி மற்ற நாடுகளில் தங்கள் வர்த்தகங்களை நிறுவினர்இ அதே நேரத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் குடியுரிமை உரிமைகள் எதுவும் இல்லாமல் தோட்டங்களுக்குள் முடக்கப்பட்டனர்.
1956 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முழக்கமாக தனிச் சிங்கள சட்டத்தை அமுலாக்கினார். அவர் காலம் கடந்து தனது தவறை உணர்ந்துஇ தமிழ் சமஷ்டி கட்சி தலைவர் ளு.து.ஏ செல்வநாயகத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். எவ்வாறாயினும்இ இனவெறி இந்த நாட்டின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதுஇ சிறுபான்மையினரின் கோரிக்கைகள்இ முறையீடுகள் மற்றும் நியாயமானஇ சட்டபூர்வமான உரிமைகள் செவி மடுக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டன. அப்படி எதுவமே இல்லாத்து போன்ற ஒரு நலை உருவாக்கப்பட்டது.
1970இல் பிரதமர் திருமதி. சிறீமாவோ பண்டாரநாயக்கவின் ஐக்கிய முன்னணி அரசாங்கம் புத்த மதத்தை பிரதான மதமாக பிரகடனம் செய்ததுஇ இதன் காரணமாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாக்கப் பட்டதுஇ இது இருபெரும் முக்கிய சமூகங்களான சிங்கள மற்றும் தமிழர்களுக்கு இடையிலான பிளவுகளுக்கும் வழிமைத்த்து.
எரியும் நெருப்புக்கு மேலும் எரிபொருள் சேர்ப்பது போல் அனைத்து அதிகாரங்களையும் தனது கைகளில் ஒருங்கிணைத்து கொடூரமான நிறவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை து.சு.ஜயவர்தன அறிமுகப்படுத்தினார். 1983 ஜூலையில் தமிழ் பயங்கரவாதிகளால் யாழ்ப்பாணத்தில் சிங்கள படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக தெற்கின் சிங்கள மக்கள்இ அரசாங்க ஆதரவுடைய குண்டர்களின் துணயோடு தமிழர்களைக் கொல்லவும் அவர்களின் சொத்துக்களை எரிக்கவும் தொடங்கியபோது ஜேஆரின் அரசாங்கம் கண்மூடித்தனமாக அதை அனுமதித்த்து
இதன் விளைவாக நீடித்த தமிழ் போராளிகளின் முப்பது ஆண்டு கால ஆயுதப் போராட்டம்இ ஒரு காலத்தில் சொர்க்க புரி என்று அழைக்கப்பட்ட அமைதியான நாட்டை ஒரு கொலை களமாக மாற்றியது. இதனால் இந்தியப் படைகள் மற்றும் ஆயுத விற்பனையாளர்கள் இங்கு நிலைகொண்டனர்இ உலகம் முழுவதிலும் உள்ள மரணத்தை வைத்து பிழைப்பு நடத்தும் வியாபாரிகளுக்கு இங்கு வரவேற்பு அளிப்பட்டது. இது இந்த நாட்டின் விலைமதிப்பற்ற வளங்களை வடிகட்டியதுஇ பொருளாதார வளர்ச்சியை தாமதப்படுத்தியது மரணம் மற்றும் அழிவை ஏற்படுத்தும்செயற்பாடுகளுக்கு பாதை அமைத்த்து
எப்படியோ தமிழ் போராளிகள் ஒருவாறு தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் அதன் பிறகும்இ பின்னர் வந்த ஆட்சியாளர்கள் கசப்பான அந்த கடந்த காலத்திலிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோரின் ஆட்சியில் அரச ஆதரவுடன் செயற்பட்ட இனவெறி கொண்ட கூறுகள் நாட்டின் பலவேறு இடங்களிலும் சிதறி பரவலாக மற்ற சமூகங்களுடன் இணக்கமாக வாழ்ந்த நாட்டின் இரண்டாவது பெரிய சிறுபான்மையான முஸ்லிம்களுக்கு எதிராக தங்கள் இவெறியை கக்கத் தொடங்கினர்.
ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்க குண்டர்கள் முஸ்லிம்களை எல்லா இடங்களிலும் இலக்கு வைத்து தாக்கத் தொடங்கினர்இ அவர்களின் வீடுகளை வணிக வளாகங்ளைஇ தொழில்துறை சொத்துக்ளை மற்றும் பள்ளிகளை தாக்கினர். பல அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்ட இந்த தாக்குதல்களின் பின்னணியில் அரசாங்கங்கள் இருந்திருக்கலாம் என்று பரவலாக சந்தேகிக்கப்பட்டது. இதில் வேதனை என்னவென்றால்இ பௌத்த பிக்குகள் இந்த தாக்குதல்களுக்கு தலைமை தாங்கி செயற்பட்மை தான்.
இந்த நாட்டில் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தின் ஆதரவுடனான இந்துத்துவா மற்றும் இஸ்ரேலிய சக்திகளின் பிரசன்னம் அதிகரித்த நலையில் முஸ்லிம்கள் மீதான இந்த தாக்குதல்களும் இடமபெற்றன. இந்த சக்திகளின் முஸ்லிம்கள் மீதான விரோதமும் வன்முறையும் பொதுவாக எல்லோரும் அறிந்த ஒனறே.
இந்த சூழ்நிலையில் தான் உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.பொதுசாக முஸ்லிம் சமூகத்துக்கும் இந்த தாக்குதல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும், முஸ்லிம் சமூகம் மிகக் கடினமான அட்டூழியங்களுக்கு முகம் கொடுத்தது. இஸ்லாம் மார்க்கம் சிதைக்கப்பட்டது மற்றும் முஸ்லிம்கள் எல்லோரும் வன்முறையாளர்களாக சித்தரிக்கப்பட்டனர். மற்றும் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டனர்இ ஆயிரக்கணக்கானோர் காவலில் வைக்கப்பட்டனர்இ அவர்களில் சிலர் இன்னும் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட ன. மற்றும் அவர்களின் தமது சமயத்தை கடைப்பிடிப்பதில் இன்னமும் சில கெடுபிடிகள் நடைமுறையில் உள்ளன. இந்த முஸ்லிம் எதிர்ப்பு அலையின் காரணமாகவே கோட்டபாய ராஜபக்ச 2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் பொருளாதாரத்தை மோசமாக சீர் குலைத்தார். மக்கள் மீது மோசமான பொருளாதார நெருக்கடிகளையும் கொண்டு வந்ததால் ஏற்பட்ட மக்கள் எழுச்சியால் அவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வை தொடர்ந்துஇ தமது மதிப்பை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் அடுத்த ஜனாதிபதியாக ஏற்கவே மக்களால் தோற்கடிக்கப்பட்ட அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றம் ஊடாக தேர்ந்தெடுத்தனர். அவர் மக்களுக்கு பொருளாதார நிவாரணம் அளித்ததாகக் கூறினாலும்
உணவு, மருந்துகள், மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருட்களினதும் சேவைகளினதும் விலைகளும் கட்டணங்களும் மிக அதிகமாவே காணப்பட்டன. சாதாரண பொது மக்களுக்கு தாங்க முடியாத கஷ்டங்கள் ஏற்பட்டன..
நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நெருக்கடி நிலைக்கு வந்து அது தொடர்ந்த போதும் கூடஇ இஅரசியல்வாதிகளின் ஊழலும்இ இலஞ்சமும் மோசடியும் நாட்டை சுரண்டும் செயற்பாடுகளும் முடிவுக்கு வரவில்லை. ஒவ்வொரு முனையிலும் அவை தொடர்ந்தன. அரசியலில் அவை ஒரு தீராத நோயாகப் பரவின. மக்கள் இதனால் விரக்தி அடைந்தனர். இனவாதமும் ஊழலும் தலைவிரித்தாடிய அரசியலால் மக்கள் விரக்தியின் விளிம்புக்கு வந்தனர்.பொருளாதார சுபிட்சத்துக்கான தலமைத்துவத்தை அவர்கள் தேடத் தொடங்கினர்.
அந்த தேடலின் வளைவு தான் இருண்ட ஓர் சூழ்நிலையில் மார்க்சிஸ்ட் வாத தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க நாட்டின் நறவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஊழல்வாதிகளை சட்டத்திற்கு முன் நிறுத்திஇ சிதைந்து போன நாட்டை மீண்டும் கட்டி எழுப்ப ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்தப் போவதாகவதாக அவர் உறுதியளித்துள்ளார். சிங்களவர்கள்இ தமிழர்கள்இ முஸ்லிம்கள் மற்றும் எல்லோரையும் ஒன்றணைத்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற அவரது அழைப்பு சிறுபான்மையினரின் காதுகளுக்கு ஒரு இனமையான இசையாக அமைந்துள்ளது. அதனால் தான் யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் ஜனாதிபதி அனுரகுமாராவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளன என்று நினைக்கறேன்.
Post a Comment