Header Ads



அனுபவிக்கும் முன்னாள் ஜனாதிபதிகள் - கத்தரிப்பாரா அநுரகுமார..?


இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறிப்பிட்டளவில் சீரமைக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


முன்னதாக, தனது தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய சலுகைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார்.


சட்டத்தின்படி,ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியும் அவரின் வாழ்நாளில் வாடகையின்றி பொருத்தமான குடியிருப்பைப் பயன்படுத்த உரிமை உண்டு.


பொருத்தமான குடியிருப்பு வழங்கப்படாவிட்டால், மாதாந்த ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு இணையான மாதாந்த கொடுப்பனவு அவருக்கு வழங்கப்பட வேண்டும்.


ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் பதவியை வகிக்கும் ஒருவருக்கும் மாதாந்த சம்பளத்திற்கு இணையான மாதாந்த செயலாளர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.


முன்னாள் ஜனாதிபதியின் விதவைகளுக்கு, அமைச்சரவை அமைச்சரின் பிரத்தியேக செயலாளராக பதவி வகிக்கும் நபருக்கு வழங்கப்படும் மாதாந்த சம்பளத்திற்கு இணையான மாதாந்த செயலாளர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.


அவர்கள் உத்தியோகபூர்வ போக்குவரத்திற்கும் தகுதியுடையவர்கள் மற்றும் ஒரு அமைச்சரவை அமைச்சருக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் அவர்களுக்கு உள்ளன.


எனினும் இந்த சலுகைகள் அனைத்தையும் அரசாங்கம் மீளாய்வு செய்து தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக அவற்றைக் குறைப்பதற்கான அளவுகோலை வகுக்கும் என ஜனாதிபதிக்கு நெருக்கமான உயர்மட்ட தரப்பு தெரிவித்துள்ளது. TW

No comments

Powered by Blogger.