Header Ads



உலக வங்கியிடமிருந்து அநுரவுக்கு வந்த விசேட செய்தி


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு!


இந்நாட்டில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும், அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கிக் குழுமம் வாழ்த்து தெரிவித்துள்ளது. 


உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் தலைவர் மார்டின் ரயிஸர், சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் வலய உப தலைவர் ரிகார்டோ புலிட் ஆகியோர் ஜனாதிபதிக்கு  அனுப்பியுள்ள விசேட செய்தியில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர். 


தற்போது இலங்கையின் பொருளாதாரம் மீளக் கட்டமைப்பதற்கு தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் அவசியம் என்பதை அறிந்துகொண்டுள்ளதோடு, பொருளாதார வளர்ச்சி,செழுமை, மற்றும் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் ஒரே அளவான முக்கியத்துவத்தை கொண்டவை என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 


நாட்டில் மிகவும் பாதிக்கப்படும் நிலையிலிருப்போரின் தேவைகளை பூர்த்தி செய்வதை போலவே அனைத்தும் உள்ளடங்களான அபிவிருத்திக்கு இலங்கையின் புதிய நிருவாகத் தலைமைக்கு உலக வங்கிக் குழுமத்தின் ஆதரவை பெற்றுத்தர அர்ப்பணிப்பதாகவும் அந்த கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 



(முழுமையான கடிதம் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது)


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

26-09-2024

1 comment:

  1. உலக வங்கியின் இந்த ஆக்கபூர்வமான கடிதம், ஜனாதிபதியின் நேர்மை, தியாகம் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். ரணில், மஹிந்த ராஜபக்ஸ போன்ற மாபெரும் கள்ளன்களுக்கு இது போன்ற உலகவங்கியின் கடிதம் நிச்சியம் கிடைக்காது. அந்த மாபெரும் கள்ளன்கள் பற்றி உலக வங்கி உற்பட சர்வதேச நிறுவனங்களுக்கு, இந்தக் கள்ளன்களிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது மிக நன்றாகத் தெரியும். எனவே ஜனாதிபதியையும் அவருடைய ஆட்சியையும் முழுமையாகப் பாதுகாப்பது இந்த நாட்டு மக்களின் அடிப்படைக் கடமையாகும் என்பதை உணர்ந்து அவர்கள் செயற்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.