உங்களை வாழ்த்த, நான் மிகத் தகுதியானவன்
அரசியலில் பொய் கூறவேண்டும், ஏமாற்ற வேண்டும், ஊழல் மோசடிகளில் ஈடுபடவேண்டும், அரச பொது சொத்துக்களைத்திருட வேண்டும் அப்படி எல்லாம் இல்லாவிட்டால் உங்களால் அரசியல்வாதியாக இருக்க முடியாது என்று சொல்பவர்களுக்கு மத்தியில் நான் சொன்னதெல்லாம் இப்படியான கொள்கைகளுடன் அரசியல் செய்யவேண்டும் என்றிருந்திருந்தால் இறைவன் புனித குர்ஆனில் அரசியல் செய்வதைத்தடுத்திருப்பான் (ஹறாமாக்கி இருப்பான்) என்று சொல்லி அரசியல் செய்தவன் நான்.
நீங்கள் இத்தனை காலமாக பேசிய அரசியல் கோட்பாடுகளையும் அதற்கு மேலாக ஒரு படிதாண்டி என்னுடைய சொந்த சொத்துக்களையும் மக்களுக்காக செலவு செய்து நீங்கள் கொள்கை ரீதியாக பேசும் அரசியலை செயல் உருக்கொடுத்து அரசியல் செய்தவன் நான்.
ஒரு குண்டூசியைக்கூட அரச பணத்தில் என்னுடைய சொந்த தேவைக்காக பயன்படுத்தியது கிடையாது, என்னுடைய மக்கள் பிரதிநிதி காலத்தில் எனக்காக வழங்கப்பட்ட தண்ணீர் போத்தலிற்கான செலவைக்கூட நான் அரசுக்குத் திருப்பிக் கொடுத்தவன்.
சுயநலம்பாராது மஹிந்தகுடும்பத்தின் அநியாயத்திற்கெதிராக உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் 2015 ஜனாதிபதித்தேர்தலில் மைத்திரியை ஆதரித்து ஏற்படுத்திய ஆட்சிமாற்றத்தின் தொடக்கமே இன்றய NPP இன் ஆட்சிபீடம்.
2019 இல் எனது பிரதேசத்தில் கோட்டாவை எதிர்க்க துணிவில்லாதவர்களுக்கு மத்தியில் தன்னந்தனியாக கோட்டாவிற்கெதிரான பிரச்சாரத்தை வீடு வீடாகவும், மேடைபோட்டும் மக்களுக்கு கொண்டு சென்றவன்.
நீங்கள் ஆழப்போகும் எதிர்வரும் 5 வருடமும் இந்த நாட்டு வரலாற்றில் ஜனாதிபதி ஆட்சியாளர்களில் பொன்னானகாலமாக பதிவுசெய்யுங்கள் இன்னுமொரு ஐந்து வருடத்திற்காக என்று எந்த ஒரு செயலையும் முன்னெடுத்துவிடாதீர்கள் அப்படி ஒரு கணமேனும் சிந்தித்தும்விடாதீர்கள் அது உங்களை சுயநலவாதி ஆக்கிவிடும்.
உங்களால் எழுதப்பட்ட வசனம் "They tried to bury us. They didn't know we were seeds." இப்போது துளிர்த்துவிட்டீர்கள் இதை பல்லாயிரம் ஆண்டுவாழும் ஆலமரமாக்குங்கள்.
உங்களுடைய ஆட்சிக்கு இறைவனின் ஆசிகிடைக்க பிராத்தித்து உங்கள் ஆட்சி எதிர்கால சந்ததிக்கான நம்பிக்கையாக மாறட்டும் என்று வாழ்த்துகிறேன்.
Shibly Farook
Post a Comment