Header Ads



பலம் வாய்ந்த கட்சியாக மாறப் போகிறோம்


தாயக மக்கள் கட்சியை நாட்டின் பலம் வாய்ந்த கட்சியாக மாற்றுவதே தனது நோக்கம் என அதன் புதிய தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


தாயக மக்கள்  கட்சியின் தேசிய அமைப்பாளராக திலும் அமுனுகம இன்று (25) நியமிக்கப்பட்டதுடன், அதற்கான நியமனக் கடிதத்தை அக்கட்சியின் தலைவர்  திலித் ஜயவீர, கொழும்பிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.


இங்கு உரையாற்றிய தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, "இன்று தாயக மக்கள் கட்சி முக்கியமான இணைப்பாக மாறியுள்ளது.


"எமது நண்பர் திலும் அமுனுகம இன்று எம்முடன் எமது கட்சியின் தேசிய அமைப்பாளராக இணைந்துள்ளார்." என்னார்


பின்னர் கருத்து தெரிவித்த தாயக மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம,


"இப்போது எமக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது...யாருடன் இணைந்து அரசியல் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்காக. அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளருக்கு அக்கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் மூலம் அறிவித்தேன். இன்று காலை கடிதம் அனுப்பினேன். அது இன்னும் கிடைக்காமல் இருக்கலாம்.


“இந்தக் கட்சியை வலுப்படுத்துவதற்காகவே தேசிய அமைப்பாளர் என்ற வகையில் அந்தப் பொறுப்பை ஏற்கத் தீர்மானித்தேன்.. இந்தக் கட்சியை இலங்கையின் பலமான கட்சியாக மாற்றும் நோக்கில்" என்றார்.

No comments

Powered by Blogger.