நீர்கொழும்பின் மூத்த அரசியல்வாதி, பலகத்துறை நஸ்மிஹார் காலமானார்
- இஸ்மதுல் றஹுமான் -
நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ரி.எம். நஸ்மிஹார் காலமானார்.
நீர்கொழும்பு மாநகர சபையின் சிரேஷ்ட உறுப்பினராக இவர் சுமார் 38 வருட நீண்ட சேவையாற்றியுள்ளார். ஐ.தே.க. நீண்ட கால உறுப்பினராக இருந்த நஸ்மிஹார் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
ஒத்தி வைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நீர்கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து தமது தமது ஊரில் பிரசாரக் கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது, திடீரென நோய்வாய்ப்பட்ட இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிசசை பெற்றுவந்த நிலையில் இன்று 19ம் திகதி காலமானார்.
நீர்கொழும்பு, பலகத்துறையைச் சேர்ந்த 60 வயதான இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவர்.
தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தமது ஊருக்கு பல்வேறு வேலைகளை செய்துள்ளார்.
அல்லாஹும்ம அஹ்பிர்லகு வர்ஹம்ஹு
ReplyDelete