Header Ads



வாக்குச்சீட்டை கிழித்தவருக்கும், வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்தவருக்கும் சிக்கல்


வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டை கிழித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.


ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு  இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டையே குறித்த இளைஞர் இரண்டாக கிழித்துள்ளார்.


குறித்த நபரிடம் யாழ்ப்பாணம் தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


குறித்த இளைஞர் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


2


காலி மாவட்ட, மித்தியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்வத்த சுமணராம விகாரையின் வாக்களிப்பு நிலையத்தில் இன்று (21) வாக்களிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஹிக்கடுவ தெல்வத்த போயகொட வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


வாக்களிப்பு நிலையத்திற்கு இன்று காலை வந்த அவர், தனது வாக்குச்சீட்டை பெற்றுக்கொண்டு வாக்களித்த பின்னர், அதனை புகைப்படம் எடுக்கும் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.