யாழ் ஒஸ்மானியா பழைய மாணவர்களுக்கான பொது அறிவித்தல்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்
புத்தளம் - நீர்கொழும்பு கொழும்பு வாழ் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி
பழைய மாணவர்களுக்கான பொது அறிவித்தல் !
மாவட்ட கிளை உருவாக்கப் பொதுக் கூட்டத்திற்கான அழைப்பிதழ்
(புத்தளம், நீர்கொழும்பு கிளை உருவாக்கம் - 2024.09.08 ஞாயிற்றுக்கிழமை)
கடந்த 2024.08.11 ஆம் திகதிய ஒஸ்மானியாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டத்தில் பழைய மாணவர் சங்கத்திற்கான புத்தளம் மற்றும் நீர்கொழும்பு மாவட்டக் கிளைகளை உருவாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்படித் தீர்மானத்திற்கு அமைவாக முதலில் மேற்படி இரு மாவட்டங்களிலும் கிளைகளை உருவாக்கும் வகையில் ஒரு கிளையை புத்தளத்திலும், இரண்டாவது கிளையை கொழும்பு – நீர்கொழும்பு மாவட்டங்களை உள்ளடக்கியதாக நீர்கொழும்பிலும் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிபரும் பழைய மாணவர் சங்க தலைவருமான ஜனாப் என்.எம்.சாபி அவர்களின் தலைமையில் இடம்பெறும் மேற்படி இரு மாவட்டங்களின் கிளைகள் உருவாக்கத்திற்கான பொதுக் கூட்டத்திற்கான பகிரங்க அழைப்பு இத்தால் வெளியிடப்படுகின்றது.
நீர்கொழும்பு கிளை தெரிவு
காலம் - 2024.09.08 (ஞாயிற்றுக் கிழமை)
நேரம் - காலை 10.00 மணி முதல்
இடம் - No :403/1 Lazarus road,
Periyamulla, Negombo.
குறிப்பு :- நீர்கொழும்புக் கிளையானது கொழும்பு, நீர்கொழும்பு வாழ் பழைய மாணவர்களை உள்ளடக்கியதாக தெரிவு செய்யப்பட்டு, அதிலிருந்து கொழும்பை பிரிதிநிதித்துவம் செய்யும் இரு பிரதிநிதிகள் தாய்ச் சங்கத்தின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவார்கள். இப் பொதுக் கூட்டத்தில் காலி, பாணந்துறை, கண்டி மற்றும் குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஏனைய பழைய மாணவர்களும் பங்குபற்ற முடியும்.
புத்தளம் கிளை தெரிவு
காலம் - 2024.09.08 (ஞாயிற்றுக் கிழமை)
நேரம் - இரவு 8.30 மணி முதல்
இடம் - Al Madrasathul Quraniyathul Falahiya,
No :122 /10, 7th Cross Street, Sadhamiyapuram , Thillayadi, puttalam
குறிப்பு :- புத்தளம் கிளையானது புத்தளம் வாழ் பழைய மாணவர்களை உள்ளடக்கியதாக தெரிவு செய்யப்பட்டு, அதிலிருந்து இரு பிரதிநிதிகள் தாய்ச் சங்கத்திற்காக தெரிவு செய்யப்படுவார்கள். இப் பொதுக் கூட்டத்தில் புத்தளத்தை அண்மித்த வவுனியா மற்றும் அநுராதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஏனைய பழைய மாணவர்களும் பங்குபற்ற முடியும்.
கலந்துரையாடல் இடத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு பின்வருவோரை தொடர்பு கொள்ள முடியும்.
நீர்கொழும்பு பொதுக் கூட்ட ஏற்பாட்டு இணைப்பாளர் - ஜனாப் ஏ.எம்.அமீர் (0777111857)
புத்தளம் பொதுக் கூட்ட ஏற்பாட்டு இணைப்பாளர் - மௌலவி அப்துல் மலிக் (0718618749)
மேற்படி இரு மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவட்ட கிளைகள் உருவாக்க பொதுக் கூட்டத்தில் அந்த அந்த பிரதேசங்களில் வசிக்கும் பழைய மாணவர்களை தவறாது கலந்து கொள்ளுமாறு அழைத்து நிற்கின்றோம். தங்களின் பங்குபற்றல், ஆலோசனைகளை பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.
ஏற்பாடு
என்.எம்.சாபி
தலைவர் (அதிபர்)
பழைய மாணவர் சங்கம் - யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி
பொதுக் கூட்டம் தொடர்பான பொதுவான தொடர்புகளுக்கு :- 0717066338, 0773454190
Post a Comment