அநுரகுமார அரசாங்கத்தின் காலக்கெடு - இன்று முன்னாள் அமைச்சர்களுக்கு சென்ற உத்தரவு
பொது நிர்வாக அமைச்சு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எழுத்து மூலம் இன்று -27- அறிவித்துள்ளது.
15 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஏற்கனவே அரச வீடுகள் மற்றும் பங்களாக்களை ஒப்படைப்பது குறித்து விசாரணை நடத்தியதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பல நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கிய கொழும்பு அரச பங்களாக்களின் எண்ணிக்கை 50 ஆகும்.
இதேவேளை, பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி வரை முன்னாள் உறுப்பினர்கள் மாதிவெல குடியிருப்பைப் பயன்படுத்துவதற்கு நாடாளுமன்றத் தலைவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதியோ அல்லது அதற்கு அடுத்தநாளுக்குள்ள வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான கொடுப்பனவுகள், கட்டணம் மற்றும் ஏனைய வசதிகள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் இரத்து செய்யப்பட்டன.
அந்த சுங்கத் தீர்வையற்ற (மரிக்)கார் எங்கே! கொலன்னாவை மக்களுக்கு மாத்திரமன்றி இந்த நாட்டு மக்களையே மாடாக்கி அரசியலை வைத்து வயிறு வளர்க்க எத்தனித்த உமது சூழ்ச்சி இப்போது பொது மக்களுக்கு நன்றாக புரிந்துவிட்டது. முடியுமானால் கொலன்னாவ அல்லது வேறுஎந்த தேர்தல் மாவட்டத்தில் நீர் போட்டியிட்டாலும் உம்மைத் தோல்விக்கு மேல் தோல்வி தட்டி வீட்டுக்கு அனுப்பி வைப்போம். முடியுமானால் போட்டிக்கு வாரும்.
ReplyDelete