மதுபான லைசன்ஸ் பெற்றவர்களின் விபரங்கள்
மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“300 இலட்சம் ரூபாய் முதல் 400 இலட்சம் ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்தவர்கள் உள்ளனர்.
அவர்களின் விபரங்கள் எம்மிடம் உள்ளன. ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும்.
அத்துடன் அவ்வாறான சகல தரப்பினர் தொடர்பான விபரங்களும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் ” என குறிப்பிட்டுள்ளார்
ஏன் இப்போதே அந்த படுபாவிகளின் பெயர்களைக்கூற முடியாது. அந்தப் பெயர்களை உடனடியாக பத்திரிகைகளுக்கு வழங்கி அவர்கள் யார் என தெரிந்து கொண்டால் அடுத்த தேர்தலின் போது பொது மக்களின் நடத்தையைச் சீரமைத்துக் கொள்ளலாம்.அது NPP நிச்சியம் வலுவூட்டும்.
ReplyDelete