Header Ads



இஸ்ரேலிய விசேட இராணுவம், சிரியாவில் தரையிறங்கி தாக்குதல் - ஹிஸ்புல்லாவுக்காக ஈரான் கட் டிய தளம்..?


சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா ஏவுகணை உற்பத்தித் தளம் ஒன்றுக்குள் புகுந்து இஸ்ரேலிய விசேட படை தாக்குதல் நடத்தியுள்ள விபரம் வெளியாகியுள்ளது.


இந்தத் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய அரசு எந்தத் தகவலையும் வெளியிடாதபோதும் அண்மையில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்த விபரத்தை அமெரிக்க ஊடகம் வெளியிட்டுள்ளது.


லெபனானின் எல்லையில் இருந்து வடக்காக சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் மஸ்யாப் நகருக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரச ஊடகம் தெரிவித்தது.


இது தொடர்பில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருக்கும் செய்தியில், ஹெலிகொப்டர்களில் வந்து இறங்கிய சிரிய விசேட படையினர் ஈரானினால் கட்டப்பட்ட தளத்தை குண்டு வைத்து தகர்த்ததாகவும் அங்கிருந்த முக்கிய தகவல்களை எடுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளது.


அமெரிக்கா மற்றும் மற்ற அதிகாரிகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த செய்தி வெளியாகியுள்ளது. சிரிய பாதுகாப்புப் படைகளை கட்டுப்படுத்துவதற்கு குறித்த தளத்திற்கு படையினர் குவிக்கப்படுவதை தடுக்கவே இஸ்ரேல் அங்கு வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.


சிரியாவில் இஸ்ரேல் அடிக்கடி வான் தாக்குதல்களை நடத்துகின்றபோதும் அங்கு துருப்புகள் தரையிறங்கி தாக்குதல் நடத்துவது வழக்கத்திற்கு மாறானதாகும்.

No comments

Powered by Blogger.