Header Ads



தேர்தலில் போட்டியிடமாட்டேன், அநுரகுமாவின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிப்பேன்




முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.


நீதி மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவி வகித்த விஜேதாச ராஜபக்‌ச, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவிக் கொண்டார்.


இந்நிலையில் எதி்ர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.


அத்துடன், தற்போதைய நிலையில் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவதற்குப் பதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனினும், அவரது தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி (ஜாதிக பிரஜாதந்திரவாதி பெரமுண) பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அதன் உபதலைவர் கோமிக யஸஸ் விஜேசிர அறிவித்துள்ளார்.

1 comment:

  1. சட்டமும் நீதியும் நன்கு தெரிந்த, சட்டம் நீதியின் காப்பாளனாக தெரிவு செய்யப்பட்டு ஆட்சியில் நீதி மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவி வகித்த விஜேதாச ராஜபக்‌ச வை அவருடைய சூழ்ச்சியில் சிக்கி வீழ்த்துவதற்கு பல மாதங்கள் திட்டமிட்டு சரியாக செயற்படுத்தியமை எமக்கு நன்றாக விளங்கியது. உயர் நீதிமன்றத்தில் வழக்கில் இருக்கும் சுதந்திரக்கட்சியில் மை3 மூலம் தவிசாளராக நியமித்து தொடர்ந்தும் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒத்திவைத்து அதிலும் தோல்வியடையச் செய்து சனாதிபதி தேர்தலில் வேட்பாளராக விண்ணப்பித்ததிலும் ரணிலின் சூழ்ச்சி மிகச் சரியாக இருந்தது. ஆனால் சட்ட அமைச்சருக்கு அதுவிளங்கவில்லை. நாம் சரியாக தெரிந்து வைத்திருந்தோம். ஏனைய அமைச்சர்களை விட இவரிடம் சில விடயங்களில் நேர்மை ஓரளவுக்கு இருந்தது. ஆனால் இவருடைய வாயைத் திறந்தால் வௌிவரும்விடயங்களில் ரணிலுக்கு அறவே விருப்பமிலலை. அதனால் தான் இவரை ஒதுக்க ரணில் திட்டமிட்டார். ஆனால் ரணில் செய்யும் அனைத்துச் சூழ்ச்சியிலும் ரணிலும் தோல்வியடைந்து மற்றவரையும் தோல்வியடையச் செய்யும் என்பது வரலாற்றுப்படிப்பினை. இதன் பிறகும் யாரும் எந்த அரசியலுக்கும் ரணிலுடன் சேரவேண்டாம் என இந்த நாட்டு பொதுமக்களுக்கும் குறிப்பாக அரசியல் வாதிகளிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.