புலிகளை உடைத்தமைக்காக ரணிலுக்கு வழங்கப்பட்ட தண்டனை
புலிகள் இயக்கத்தினை இரண்டாக பிளவுபடுத்தியதற்காக விடுதலைப் புலிகளினால் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனை தான் 2005 ஆம் ஆண்டு தேர்தலை பகிஸ்கரிக்கச் செய்தது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று (17) மாலை மட்டக்களப்பு கல்லடி மீனிசை பூங்காவில் நடைபெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேத்திரன் கலந்துகொண்டார்.
-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-
Post a Comment