முஸ்லிம்களுடன் நெருக்கமான நல்லிணக்கத்தினை குமார் வெல்கம கொண்டிருந்தார்
நீதிக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் என்றும் துணிந்து குரல் கொடுத்த ஒரு அரசியல்வாதி குமார வெல்கம என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம அவர்களின் இழப்பு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"இலங்கை அரசியலில் துணிந்து, கருத்துக்களால் எதனையும் எதிர்கொள்ளக்கூடிய அரசியல்வாதியான குமார வெல்கமவின் இழப்பு குறித்து எனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
முன்னாள் அமைச்சரும், சக பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம, மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியதுடன், அப்பிரதேசத்தில் வாழும் மூவின மக்களினாலும் விரும்பக்கூடியவராக இருந்து வந்துள்ளார்.
இதேவேளை, முஸ்லிம்கள் செறிந்துவாழும் வெலிகம பகுதி மக்களின் அதிகப்படியான வாக்குகள், கடந்த தேர்தல்களில் குமார வெல்கமவுக்கு அளிக்கப்பட்டமையானது, அப்பிரதேச முஸ்லிம்களுடன் அவருடைய நல்லிணக்கத்தினை எடுத்துகாட்டுகின்றது.
மக்களின் நன்மைக்காக, தான் வகிக்கும் அமைச்சுப் பதவியினைக் கூட விட்டுவிட்டு, சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இருந்து, துணிந்தும் அச்சமின்றியும் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் தமது ஆழமான கருத்துக்களை தெரிவித்து வந்த ஒரு அரசியல்வாதியாக, அமரர் குமார வெல்கமவை காணமுடியும்.
கஅவர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தமது 74 வயதில் மரணமாகியுள்ளார்.
அன்னாரது இழப்பினால் துயறுற்றிருக்கும் குடும்பத்தினர்கள் மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment