சிறந்த தருணம் இதுவாகும், தாமதிக்க வேண்டாம் - நாமல்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கும், தேர்தல் முறையை மாற்றுவதற்கும் தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்தால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது பூரண ஆதரவை வழங்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
1994ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை அனைத்து ஜனாதிபதிகளும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக கூறிய போதிலும், எவரும் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான சிறந்த தருணம் இதுவாகும்.
எனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டிய தேவை இருந்தால் தாமதிக்க வேண்டாம் என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
இழிக்கும் பல்லைப் பார்க்கும் போது முற்றிப் போன நயவஞ்சகம் மிகத் தௌிவாக தெரிகிறது. அவசரப்படாதே. மிகக் குறுகிய நாட்களில் உனது கைக்கு விலங்கிடப்பட்டு ஒற்றையறை கழிகறைச் சிறையில் தள்ளும் நேரம் மிக நெருங்கிக் கொண்டிருக்கின்றது. உமது நிரந்தர ஜம்பர் உறுதியாகிய பின்னர் ஜனாதிபதி பதவி பற்றி யோசிப்போம். சற்றுப் பொறுத்திரு.
ReplyDelete