Header Ads



நாலக கொடஹேவாவினால், சஜித்துக்கு ஆபத்து -அமைச்சர் சுசில்


கோட்டாபய ராஜபக்‌ஷவின் முதுகில் ஏறி பயணித்து அவரையே கவிழ்த்த நாலக கொடஹேவா போன்றோர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்திருப்பது சஜித்துக்கு ஆபத்தானது என்று சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள், கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட விதிகள் மீதான விவாதத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்து எதிர்க்கட்சி சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா வெளியிட்ட கருத்து தொடர்பில் தனது பதிலை வழங்கி உரையாற்றும் போதே சுசில் பிரேமஜயந்த இவ்வாறு கூறினார்.


No comments

Powered by Blogger.