Header Ads



நாகரீகமான சமூக தொடர்பாடல்கள் சில..




🔴 ஒருவரின் போனுக்கு இரண்டு முறை தொடர்பு கொண்டும் பதிலளிக்கவில்லை என்றால், அவர் ஏதாவது வேலைப் பளுவில் இருக்காலாம் என்று நல்லெண்ணம் வையுங்கள்!


🔴 ஒருவரிடம் நீங்கள் கடன் வாங்கினால்,  அவராக வந்து கேட்பதற்கு முன்னர் நீங்கள் குறித்த தவணையில் பணத்தை திருப்பிச் செலுத்துங்கள். இது நீங்கள் நம்பிக்கையானவர், நாணயமானவர் என்பதற்கான ஒரு சான்றாகும். மற்ற விசயங்களிலும் இதனை கடைப்பிடித்தது வாருங்கள்!


🔴 ஒருவர் உங்களை உணவகத்தில் சாப்பிட அழைத்தால் மெனுவில் உள்ள விலை உயர்ந்த உணவை ஒருபோதும் கேட்டு வாங்காதீர்கள்.

 

🔴 "ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை?, "உங்களுக்கு குழந்தைகள் இல்லையா", "நீங்கள் ஏன் வீடு வாங்கவில்லை?" உங்கள் சம்பளம் எவ்வளவு "? போன்ற சங்கடமான கேள்விகளை யாரிடமும் கேட்காதீர்கள். இது உங்களுக்கு தேவையில்லாத வேளை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 


🔴 பொது இடங்களில் பெண்கள் முதியவர்கள், மற்றும் சிறுவர்கள் வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள். இது நீங்கள் நாகரீகமானவர் என்பதற்கான அடையாளமாகும். 


🔴 பிறர் கருத்துக்களை மதிக்கப் பழகுங்கள். உங்களுக்கு 6 ஆகத் தோன்றுவது மற்ற ஒருவர் பார்வையில் 9 ஆகத் தோன்றலாம். 


🔴 ஒருவர் பேசும் போது இடையில் குறுக்கிட்டுப் பேசாதீர்கள். அவர் கருத்தை சொல்லட்டும்.  நிதானமாக கேட்டுவிட்டு, நீங்கள் விரும்பிய கருத்தை தேர்ந்தெடுக்க, நிராகரிக்க உங்களுக்கு உரிமை உண்டு. 


🔴 நீங்கள் யாரிடமாவது பேசிக் கொண்டிருந்தால், உங்கள் உரையாடலை அவர் ரசிக்கவில்லை எனத் தோன்றினால், உடனே நிறுத்துங்கள், மீண்டும் தொடராதீர்கள். 


🔴 யாராவது ஏதாவு உங்களுக்கு உதவிகள் செய்தால் "நன்றி" என்ற வார்த்தையை சொல்ல மறவாதீர்கள். 


🔴 யாரையும் பகிரங்கமாகப் புகழுங்கள்!தனிப்பட்ட முறையில் அறிவுரை செய்யுங்கள்!


🔴 யாரேனும் ஒருவர் அவரது மொபைலில் ஒரு புகைப்படத்தை உங்களுக்குக் காட்டினால், இடது அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்து மற்ற படத்தை பார்க்க முற்படாதீர்கள். அடுத்த படம் அவரது தனிப்பட்ட படமாக இருக்கலாம். 


🔴 ஒருவர் தனக்கு மருத்துவ சந்திப்பு இருப்பதாக சொன்னால், ஏன், எதற்காக? என்று கேட்காதீர்கள், "நலம் கிடைக்க பிரார்த்தனைகள் என்று வாழ்த்துங்கள்.  அவரின் தனிப்பட்ட நோயைப் பற்றி உங்களிடம் சொல்ல வேண்டிய சங்கடமான நிலைக்கு ஆளாக்காதீர்கள். அவர் விரும்பினால் அவரே சொல்வார். 


🔴 உங்கள் மனேஜருக்கு நீங்கள் கொடுக்கும் அதே மரியாதையை காவலாளிக்கும் கொடுத்துப்பாருங்கள். நாம் நாகரீகமாக நடக்கிறோமா என்றுதான் எல்லோரும் அவதானிப்பார்கள். 


🔴 பிறர் நலம் நாடுவதும் பிறரை மதிப்பதும் நமக்கு மரியாதையை கொண்டு வரும் என்பதை மறவாதீர்கள்.


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.