பிரித்தானியாவின் முடிவு ஹமாஸை, தைரியப்படுத்தும் என கதறும் இஸ்ரேல்
இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்தும் பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவை அந்நாட்டு பிரதமர் அலுவலகம் கடுமையாக சாடியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி நேற்று, இஸ்ரேலுக்கான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30 ஐ இடைநிறுத்துவதாக தெரிவித்திருந்தார்.
சர்வதேச சட்டத்தை மீற இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற ஆபத்து இருப்பதாக அவர் மேற்கோள்காட்டி இந்த அறிவிப்பை வெளிப்படத்தினார்.
இடைநிறுத்தப்பட்ட உபகரணங்களில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுக்கான பாகங்கள் அடங்கும் என அவர் கூறியிறுந்தார். மேலும், இது முழு ஆயுதத் தடையல்ல என்றும் லாமி கூறியுள்ளார்.
"மிளேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக தன்னைக் காத்துக் கொள்ளும் ஜனநாயக நாடான இஸ்ரேலுடன் நிற்பதற்குப் பதிலாக, பிரித்தானியா மேற்கொண்டுள்ள தவறான முடிவு ஹமாஸைத் தைரியப்படுத்தும் ,சாடியுள்ளது
Post a Comment