அநுரகுமார தெரிவித்துள்ள விடயங்கள்
நாட்டை கட்டியெழுப்ப மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நிறைவேற்றும் திறனும், அர்ப்பணிக்கப்பட்ட திறமையான குழுவும் தன்னிடம் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது X தளத்தில் இட்டுள்ள பதிவில்,
"ஒரு ஐக்கிய அணியாக நாட்டை கட்டியெழுப்பும் பங்கை நிறைவேற்றும் திறன் எங்களிடம் உள்ளது, மேலும் இந்த பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட திறமையான குழுவையும் நாங்கள் கொண்டுள்ளோம். அத்துடன், எங்களின் உறுதியானது அசைக்க முடியாதது” என பெருமிதம் கொண்டுள்ளார்.
அதேவேளை, அனைத்து குடிமக்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளையில் சட்டத்தை மதிக்கும் தேசத்தை உருவாக்குவதற்கும், ஒழுக்கமான சமுதாயத்தை வளர்ப்பதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை உயிர்ப்பிக்கிறது எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 57,40179 வாக்குகளை பெற்று அநுரகுமார திஸாநாயக்க நாட்டின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார்.
இதனை தொடர்ந்து, அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் புதிய அரசாங்கத்திற்கான ஆளுநர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை நியமித்து வருகின்றார்.
இந்நிலையில், தம்மிடம் உறுதியானதும் திறன்மிக்கதுமான அணி உள்ளது என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
Post a Comment