இந்த வசனங்கள் அல்லாஹ்வின் வசனங்கள்
அபூ லஹப் நினைத்திருந்தால் முஹம்மதையும் அவர் கொண்டு வந்த மார்க்கத்தையும் ஒரு வார்தையில், ஒரு வினாடியில் பொய்ப்பித்துக் காட்டியிருக்கலாம், அல்குர்ஆன் முஹம்மதின் பித்தலாட்டம் என்று உலகுக்கே உடைத்துக் காட்டியிருக்கலாம். ஆனால் அவரால் முடியாமல் போய்விட்டது.
இஸ்லாம் மார்க்கம் விண்ணுலக மார்க்கம் என்பதற்கும் இந்த வேத வசனங்கள் ஞானம்மிக்க இறைவனின் வார்த்தைகள் என்பதற்குமான ஒரு சான்றாகவே இந்த சம்பவத்தை நான் பார்க்கின்றேன்.
முஹம்மத் நபிகளின் நெருங்கிய உறவினரான அபூ லஹப் என்பவர், முஹம்மத் கொண்டு வந்த தூது செய்தியை பகிரங்கமாக எதிர்த்தவர். அதற்காக தீவிரமாக களத்தில் இறங்கி செயற்பட்டவர். அபூ லஹப் சபிக்கப்படவர் என்றும் அவர் நரகம் நூழையும் நரகவாசி என்றும் அல்குர்ஆனின் ஒரு அத்தியாயம் முழுவதுமாக அடித்து ஆருடம் கூறுகின்றது. அதுவும் அவர் உயிரோடு இருக்கும் போதும், அவகாசங்கள் இருக்கும் போதும் ஊர்ஜிதம் செய்துவிட்டது.
அபு லஹப் இறப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த வசனங்கள் இறங்கின. அபூ லஹப் நினைத்திருந்தால் நிஜமாகவோ, வஞ்சகமாகவோ இஸ்லாத்தை ஏற்று விட்டு ' இதோ பாருங்கள்! நான் முஸ்லிமாகிவிடேன், ஆனால் நான் நரகவாசி என முஹம்மத் சொல்கிறார். இப்போது சொல்லுங்கள்! முஹம்மத் பொய்யர்தானே! என்று சவால் விட்டிருக்கலாம்.
ஆனால், அவர் அவ்வளவு காலமும் இஸ்லாத்தை ஏற்க முயற்சிக்கவும் இல்லை, முஸ்லிம் போன்று நடிக்கவும் முடியாமல் போய்விட்டது. காரணம், இந்த வசனங்கள் மறைவான அம்சங்களை அறிந்த அல்லாஹ்வின் வசனங்கள் என்பதாகும்!
கேரி மில்லர் / இஸ்லாத்தை ஏற்ற கணிதவியலாளர்
தமிழாக்கம் / imran farook
Post a Comment