Header Ads



அமெரிக்காவுக்கு ஓடினார் பசில்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் சென்றதாக விமான நிலைய கடமை முகாமையாளர் தெரிவித்தார்.


அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் (EK-649) துபாய்க்குப் புறப்பட்டார்.


இந்த விமானத்தை அணுகுவதற்காக அவர் USD 206 செலுத்தியதாகவும்,  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள 'கோல்ட் ரூட்' முனையத்தில் வசதியைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.


பசில் ராஜபக்ச முதலில் டுபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வார் என்றும், அவர் எப்போதும் அமெரிக்கா செல்வதற்கு இந்த விமானப் பாதையையே பயன்படுத்துவார் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

1 comment:

  1. நல்லம், பாய்ந்து போங்க, உங்களை இரு கைகளுக்கும் Hand cuff மீண்டும் சிறைக்கு அழைத்து வரும் செயன்முறை அடுத்து வரும் ஆட்சியாளருக்கு நன்றாகத் தெரியும்.

    ReplyDelete

Powered by Blogger.