Header Ads



யாருக்கு இயலும்..?


- MNM. யஸீர் அறபாத் -


இலங்கை தேசம் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருந்த சூழலில் இன்று ஒரு ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது. குறித்த தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று நாட்டைக் கட்டியெழுப்பும் தலைவர் யார்? யாரால் இயலும்? என்ற கேள்விகளுக்கு மத்தியில் முதன்மையாக இருக்கும் நான்கு பேருக்கிடையில் போட்டி நிலவுகிறது.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க, இன்னுமொரு  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேற்குறித்த நான்கு முதன்மையான வேட்பாளர்களும் நாட்டைக் கட்டியெழுப்பும் இயலுமை தங்களுக்கிருக்கிறது என்ற நிலையில், இவ்விடயத்தில் மக்கள் யாரை அதிகம் நம்புகிறார்கள் என்பது தொடர்பான மக்கள் தீர்ப்பு குறித்து நடைபெறவிருக்கும் ஜனாதிபதித்தேர்தலில் வெளிப்படுத்தப்படவிருக்கிறது.


ரணில் விக்ரமசிங்க 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எடுத்துக் கொண்டால், அவரோடு இருக்கின்ற அணி யார்? எனப்பார்த்தால் கடந்த ஆட்சியில் நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச்செல்வதற்கு ஆட்சியாளருக்கு உறுதுணையாக இருந்தவர்களே. 


இன்று தங்ளைப் பாதுகாத்துக் கொள்ளவும், மீண்டுமொரு முறை அதிகாரத்தைப் பெறும் ஆசையில் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருக்கின்ற போதும், ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்கள் குறித்த தேர்தலில் பரவலாக ஜனாதிபதிக்காக தேர்தல் வேலைகளைச் செய்வதைக்காண முடியவில்லை. 


குறித்த மொட்டு அணிக்கு ஜனாதிபதி கொடுக்கும் அதீத முக்கியத்துவத்தால் அதிரிப்தியில் இருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத்தெரிவு செய்யப்பட்ட போதும், ஐக்கிய தேசியக்கட்சியை பலப்படுத்துவதை விடுத்து தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்து கொண்ட நாட்டை வங்குரோத்தடையச் செய்த மொட்டுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பதிலேயும், அவர்களை தன்னோடு இணைத்துக் கொண்டு பயணிப்பதிலேயும் கவனஞ்செலுத்தினார்.  இது மக்கள் மத்தியிலும் வெறுப்பைத் தோற்றுவித்திருக்கிறது.


இந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் மக்கள் தெளிவடைந்திருக்கிறார்கள். அவருக்கு ஆட்சி கிடைத்தாலும் குறித்த காலத்தை முழுமைப்படுத்தியதாக இதுவரை வரலாறில்லை. 


பொருளாதார தொடர்பான அறிவு ஜனாதிபதியுடனான அணியில் ரணில்  விக்கிரமசிங்கவுக்கு மாத்திரமே இருக்கிறது, நாட்டைக்கட்டியெழுப்ப தனக்கே இயலுமே இருக்கிறதாகச் சொல்கிறார். 


ஆனால், சர்வதேச நாணய நிதியம் விதித்த வரையறைகளையும் தாண்டி அப்பாவி மக்களிடம் அதிக வரிச்சுமைகளை விதித்து, மின்சாரக்கட்டணங்களை உயர்த்தி நிதிகளைத் திரட்டி, தற்போது தனக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி நிதியென பங்கு வைக்கிறாரா? என்ற நியாயமான சந்தேகம் பலராலும் எழுப்பப்படுவதைப் பார்க்கலாம்.  


எனவே, ஜனாதிபதி மீண்டும் வெற்றி பெற்றால் புதுப்புது வரிகளை அறவிட்டு, இன்னும் நடுத்தர மக்களை  நெருக்கடிக்குள்ளாக்குவார் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 


பொருட்களின் விலைவாசி மீண்டும் உயர்ந்தால் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியும் பயனில்லை. 


எனவே, ஜனாதிபதியின் போக்கில் மக்கள் நம்பிக்கையிழந்து விட்டார்கள். இதனால் தேர்தல் பிரசார மேடைகளை நோக்கி மக்களின் வருகை மந்தகதியிலேயே இருக்கிறது. 


தற்போது ரணில் விக்ரமசிங்க தான் தோற்று விடுவேன் என அஞ்சுகிறார். அதனால் மேடைகளில் அதிகம் நகைச்சுவையோடு பிதற்றித்திரிவதியைப் பார்க்க முடிகிறது. 


அத்தோடு, சஜித் வென்று விடக்கூடாதென்பதிலும் கவனமாக இருக்கிறார். இன்னும் அதிகமானவர்கள் தேர்தல் நெருங்கும் போது ரணில் விக்ரமசிங்கவை விட்டு வெளியேறி விடுவார்கள் என நம்பப்படுகிறது.


சஜித் பிரேமதாச 

அடுத்ததாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, நெருக்கடியான காலத்தில் ஆட்சியைப் பொறுப்பேற்கச் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. 


ஆனால், உண்மை நிலையை ஆராய்ந்து பார்த்தால், முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் ஆட்சியின் போது பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் உச்சத்தை தொட்டுக்கொண்டிருந்த வேளையில், நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்குமாறு சஜித் பிரேமதாச அழைக்கப்பட்டார். 


தங்கள் மீதான மக்களின் கோபத்தை திசை திருப்பவும், தாங்கள் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்கவுமே இவ்வாறான மாற்றத்தைச்செய்ய அழைத்தார்கள். 


மக்களோ நாட்டை வங்குரோத்தடையச் செய்த ஆட்சியாளரை வெளியேறச்சொல்லி கோஷமெழுப்பிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், மக்கள் வெறுத்த  ஆட்சியில் சென்று பிரதமர் பதவியை ஏற்று நாட்டை வாங்குரத்தடையச் செய்தவர்களை பாதுகாப்பதென்பது சஜித் பிரேமதாசவையும் மக்கள் வெறுக்கும் நிலை ஏற்படும். 


அதனாலேயே ஜனாதிபதி தனது பதவியை எப்போது இராஜனாமாச் செய்வீர்கள் என்பதைக் கேட்டார், ஆனால், போராட்டத்தை தனிக்க ஒருவர் தேவைப்பட்டாரே தவிர, அவரிடம் ஆட்சியை ஒப்படைக்கும் எண்ணமிருக்கவில்லை என்பதை உணர்ந்தார். 


எனவே தான் சஜித் பிரேமதாசவுக்கு மக்களால் வெறுக்கப்படும் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டிய எந்தத்தேவையும் இருக்கவில்லை.


ஒரு வேளை, சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்றிருப்பாராகவிருந்தால் மக்கள் போராட்டம் ரணில் விக்கிரமசிங்கவிற்கெதிராக திரும்பியதைப் போன்று சஜித் பிரேமதாசவுக்கெதிராகவும் திரும்பியிருக்கும். 


அது மாத்திரமா? பாராளுமன்றில் சஜித் பிரேமதாசவை விட மொட்டு அணிக்குத்தான் பெரும்பான்மை இருந்தது.


எனவே, ஊழலை ஒழிக்கவோ, திருடப்பட்ட சொத்துக்களை மீட்கவோ ஒத்துழைப்பார்களா? ஊழல்வாதிகளை ரணில் வி்க்கிரமசங்கவைப் போல் பாதுகாப்பவரையே அவர்கள் ஆட்சிபீடமேற்ற விரும்பினார்கள்.


அதற்கு இவர் ஒத்துழைக்காது விட்டால் பிரதமர் பதவியில் தொடர்ந்திருக்க விடமாட்டார்கள். அவர்களின் ஆதரவின்றி மக்கள் விரும்புவதைச் செய்வதற்கும் வழியில்லை. 


பதவிக்காக மோசமானவர்களோடு டீல் அடித்து அரசியல் செய்ய விரும்பாததாலும், மக்கள் விருப்பத்தோடு ஆட்சிபீடமேறவே விரும்பினார். அவரோடு இருந்த கூட்டணிக்கட்சிகளும் இவ்வழைப்பின் பாரதூரத்தை உணர்ந்து அவரை அறிவுறுத்தினார்கள்.    


இப்போது பலரும் சொல்கிறார்கள் நல்ல காலம் சஜித் பிரேமதாச அன்று பிரதமர் பதவியை ஏற்கவில்லை என்று. ஒரு வேளை ஏற்றிருந்தால் அது அரசியல் தற்கொலையாகப் போயிருக்குமென்பது புத்திஜீவிகளின் கருத்தாகும். 


எதிர்க்கட்சித்தலைவராக இருந்து தன்னால் முடிந்த பணிகளை மக்களுக்கு ஆற்றி வருகிறார். மக்களை நாடிச்சென்று மக்களின் அபிமானத்தையும் பெற்று வருகிறார். 


நாட்டை வலுப்பறச்செய்யக்கூடிய பொருளாதாரத் திட்டங்களை முன்வைத்தும் வருகிறார். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய ஆளுமையுள்ள அணி ஒன்றும் சஜித் பிரேமதாசவிடம் இருக்கிறது என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.


அந்த அணியில் முக்கியமானவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரிஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, கபீர் ஹாசிம் போன்றவர்கள் இருக்கிரார்கள்.


தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யக்கூடியதான திட்டங்களை முன்மொழிந்திருப்பது மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் வரவேற்பையும் பெற்று வருகின்றது. 


சஜித் பிரேமதாசவுடன் இருக்கும் அணியினரும் வளமான நாட்டைக்கட்டியெழுப்பக் கூடியவர்கள் என மக்கள் நம்புகிறார்கள். இதன் காரணமாக தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் கூட்டம் பெருவாரியாக அலை மோதுவதை ப்பார்க்கலாம்.


அனுரகுமார திசாநாயாக்க

இவரையும், இவரது அணியையும் பொறுத்தளவில் பேச்சில் வடைசுடுபவர்களாகவே இருக்கிறார்கள்.  ஆனால், அவர்களிடம் செயலில் எதையும் காண முடிவதில்லை.


மேலும், இவர்களின் பிரதான பேசுபொருளாக ஊழல் இருக்கிறது. ஆனால், அண்மையில் அவர்களுடன் நெருக்கமான ஒருவர் ஊழலோடு தொடர்பற்ற விடயம் பகிரங்கப்படுத்தப்பட்டிருப்பது அவர்களோடும் ஊழல் இருக்கிறது என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. 


பல்வேறு தேர்தல் பிரசாரங்கள், அது தொடர்பான திட்டங்களுக்கான பொருளாதாரங்களைச் செலவழிக்கும் இவர்கள் நாட்டு மக்கள் துன்பப்படும் போது இவர்கள் உதவி செய்தார்களா? என்ற வினா மக்களால் எழுப்பப்படுவதைக் காணலாம். 


தற்போது அனுரகுமார திசாநாயக்காவின் கொள்கைகளை அறியாதவர்கள், அவர்களின் கடந்த கால வரலாறுகளைத் தெரியாதவர்கள், அவர்கள் இன்று மேடையில் பேசும் பொய்யான பேச்சுக்களை நம்பி ஏமாந்து போகும் இளைஞர் சமூகத்தைக்காண முடிகிறது. 


இவர்களிடம் பொருளாதாரம் தொடர்பான தெளிவான கொள்கைகளைக்காண முடியவில்லை. ஒழுக்கத்துக்கு முரணான கொள்கைகளை ஆதரிப்பவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். இவர்களின் வாக்கு வங்கி முன்னரை விட சற்று அதிகரிக்கப்படலாம். ஆனால், வெற்றி பெறும் வாய்ப்பென்பது இவருக்கு குறைவாகவே காணப்படுகிறது. இவர்கள் விடயத்தில் மக்கள் தெளிவடைந்து வருவதைக்காண முடிகிறது.


நாமல் ராஜபக்ச 

இவரைப்பொறுத்தவரை வெற்றி பெருமளவுக்கு வாக்கினைப் பெற்றுக்கொள்வது கடினம். மொட்டுக் கட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் சில ஆசனங்களைப் பெற்று எதிர்கால அரசியலை நகர்த்திக் கொள்வதற்கேதுவாக குறித்த தேர்தலில் போட்டியிடுகிறார்.


கணிசமான வாக்குகளைப் பெறக்கூடியதாக இருக்கும். ஆனால், வெற்றி இலக்கை அடைந்து கொள்வது கடினமாகும். நாட்டை வங்குரோத்தடையச் செய்த குடும்பமாக ராஜபக்சாக்களின் குடும்பம் இருப்பதால், மக்கள் தங்களின் கோபத்தினை வெளிப்படுத்துவதாக இவரைத் தோற்கடிப்பார்கள். 


எனவே, மேற்சொன்ன வேட்பாளர்களில் நாட்டை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லும் இயலுமை சஜித் பிரேமதாசாவுக்கும் அவரோடிருக்கின்ற அணியினருக்குமே இருக்கிறதென்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். 


அனைத்தின மக்களின் அபிமானத்தைப் பெற்ற தலைவராக சஜித் பிரேமதாச இருக்கிறார்.

1 comment:

  1. Then to whom we should vote as per your analysis.
    Why dont you come and contest if you know everything.
    Dont just be a bystander and criticize everything

    ReplyDelete

Powered by Blogger.