Header Ads



தபால்மூல வாக்களிப்பு குறித்து வெளியான அறிவிப்பு


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று -25- முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.


அது தொடர்பான அறிவித்தலை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.


நேற்று நள்ளிரவு தொடக்கம் விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார்.


அதனடிப்படையில் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.



இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் இன்று தொடக்கம் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.