Header Ads



இதில் எது இருந்தாலும், அச்சமின்றி ஓட்டுப் போடுங்கள்


வாக்காளர் ஒருவர் வாக்களிப்பதற்கு முன் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.


அதற்காக பயன்படுத்த கூடிய ஆவணங்கள் தொடர்பில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க விளக்கமளித்திருந்தார்.


" வாக்களிப்பதற்காக தேசிய அடையாள அட்டையின் பழைய மற்றும் புதிய அடையாள அட்டைகள் இரண்டும் வாக்களிக்க செல்லுபடியாகும். மேலும், செல்லுபடியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம், அரச சேவை ஓய்வூதியர் அடையாள அட்டை, பழைய அல்லது ஈ-அடையாள அட்டை ஆகிய இரண்டும் செல்லுபடியாகும்.  


மேலும், தெளிவற்ற அடையாள அட்டைகள், புதிய தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் பற்றுச்சீட்டு போன்ற புகைப்படத்துடன் கூடிய அல்லது இல்லாத வேறு எந்த ஆவணமும் வாக்குச்சாவடியில் ஏற்றுக்கொள்ளப்படாது.

No comments

Powered by Blogger.