Header Ads



நாமலின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.


குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு 'நாமல் தெக்ம' (நாமலின் தொலைநோக்கு) என்று பெயரிடப்பட்டுள்ளது.


இங்கு உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ,


அடுத்த 10 வருடங்களுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.


மேலும், நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் நாட்டில் உள்ள பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.


தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் வரி வருவாயையும் அதிகரிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.