Header Ads



நாங்கள் ஒன்றுமே செய்யல்ல என, பொய் சொல்லுகின்றார்கள் - ஹக்கீம் வேதனை


அக்குறணை வெள்ள விவகாரம் தொடர்பில்   தன்னிடம் சகல  ஆவணங்களும் உள்ளதாகவும், அவற்றைத் தொகுத்து பிரசுரமாக வெளியிடப்போவதாகவும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


இதுதொடர்பில் அக்குறணையில்  நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்  உரையாற்றினார்.     அங்கு அவர் தொடர்ந்தும்  விளக்கமளிக்கையில், 


நிறைய சம்பவங்கள் இந்த அக்குறணையில் இடம்பெற்றுள்ளன. அரசியலில் அவையெல்லாம் சகஜம். 


அட்டாளைச்சேனையிலும் சம்மாந்துறையிலும், பொத்துவிலிலும், நடைபெற்ற சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் என்றும் நினைத்திராத சனத்திரள் காணப்பட்டது. அவற்றில் கலந்து கொண்டுவிட்டு, திரும்பும் வழியில் இங்கு வந்துள்ளேன். அங்கு ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை  பெற்றுக் கொடுப்போம்.


அக்குறணைப் பிரதேசத்தில்வேண்டுமென்றே மக்கள் மத்தியில் என்னைப்பற்றியும்  சக எம்.பி ஹலீமைப் பற்றியும் பிங்கா ஓயா பிரச்சினையில் நாங்கள் ஒன்றுமே செய்யல்ல என்று பொய் சொல்லுகின்றார்கள். இதோ, நாங்கள் என்ன செய்துள்ளோம் என்பதை  பாருங்கள்.  என்னிடம்  பைல் உள்ளது. இவ்வளவு காலமும் என்ன செய்ததோமென்பது பற்றி இதில் முழுவிபரங்களும் உள்ளன.


 ஓவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்ன  செய்தோம். அதுமட்டுமல்ல பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டது மட்டுமல்ல.நாங்கள் இருவரும் அமைச்சரவையில் உள்ளபோது இது சம்பந்தமாக அமைச்சரவைப் பத்திரம் தயாரித்து, அமைச்சரவையில்   சமர்ப்பித்து, அமைச்சரவை செயலணியை நியமித்து சகல திணைக்களங்களுக்கும்    அதாவதுமகாவலி அதிகார சபை,துறைமுக அதிகார சபை,நெடுஞ்சாலை அபிவிருத்தி அதிகார சபை,அனர்த்த முகாமைத்துவ அதிகார சபை,நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகிய சபைகளின் அதிகாரிகளை  பாராளுமன்றத்துக்கு வரவழைத்து மூன்று முறை கலந்துரையாடினோம். இதன்போது வர்த்தக சங்கம் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோரையும்  அழைத்து பாராளுமன்ற கட்டடத்தில் கூட்டம் நடாத்தினோம். நாங்கள் எடுத்த முடிவுகளின்படி அறிக்கை தயாரிக்கப்படவேண்டும். அதே சந்தர்ப்பத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. இதன்பின்னர் எங்களது அரசாங்கம் கலைக்கப்பட்டது. பின்னர் புதிய அரசாங்கம் வந்த பின்பு நாங்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கின்றோம். 


இது தொடர்பாக பாராளுமன்றத்தில் இரண்டு ,மூன்று தடவைகள்  உரையாற்றியுள்ளேன். எனக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால்  அனுப்பட்ட பதில்களுக்கான முழு ஆவணங்களும் என்னிடம் உள்ளன. அதற்கான வரைபடங்களும்  என்னிடம் உள்ளன. ஆனால், அவற்றைப்பற்றி பேசப்போனால் கட்டிடங்களின் உரிமையாளர்கள் என்னுடன் வம்புக்கு வருவார்கள். 


  இந்த விடயத்தில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர்தான்   என் மீது முழு சுமைகளையும் சுமத்துவதற்கு முயற்சி செய்கிறார்.

இது தொடர்பாக பகிரங்க விவாதத்துக்கும்   நான் தயார்.    


அண்மையிலும் வெள்ளம் வந்தது. அதை ஜனாதிபதிக்கு அறிவித்தேன். அவர் கண்டிக்கு வரும் போது சந்தித்துக் கலந்துரையாடுவதாகக் கூறினார்.

இதற்கு விஞ்ஞான பூர்வமாக முடிவு காண வேண்டியுள்ளது. இது தொடர்பாக அக்குறணை பிரதேச சபை கூட்டத்தில் நான் பேசிய சகல விடயங்களும் இங்கு சிங்களமொழியில் உள்ளன.  


 ஜனாதிபதியுடன் சொன்னதும். ஜனாதிபதி தலைமையில் கூட்டமொன்று ஆயத்தமானது.அதற்கு பள்ளிவாசல் நிர்வாகிகளும்,உலமா சபையினரும் வரவில்லை.ஏனையோர்  பகிஷ்கரிப்பதாக முடிவெ டுத்திருந்தார்கள்.மத்திய பிராந்திய நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை காணிமீள் நிரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அதிகாரிகள் தான்  இந்தப்  பிரச்சினைக்கு சிறந்த முடிவை வழங்கக் கூடியவர்கள்.நான் ஜனாதிபதியோடு பேசி முழுமையான சாத்தியக்கூறு அறிக்கைக்கு ஏற்பாடு செய்தேன்.


 மைத்திரியின் ஆட்சிக் காலத்தில் 100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 60 மில்லியன் ரூபா திட்டத்தின் கீழ் பிங்கா ஓயாவை அம்பதென்னவரை தோண்டி  ,ஆழமாக்கினோம். ஆனால்   மீண்டும் வெள்ளம்  ஏற்படும்போது  பழைய நிலை தான் என்றும்        இது நிரந்தர தீர்வு அல்ல  என்றும்  கூறினார்கள். 


பின்னர்,அவர்கள் 22மில்லியன் ரூபாவுக்கான இத் திட்ட வரைபைத் தந்தார்கள் .இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுடன் மூன்று முறை தொடர்பு கொண்டு, இதற்கான பணத்தை செலுத்துமாறு ஆளுநருக்கு சொல்லுங்கள் என்று சொன்னேன்.


 இவ்வளவும் செய்தும் நாங்கள் ஒன்றுமே செய்யவில்லையென குற்றம்சுமத்துவது நியாயமற்றது. இந்த விடயத்தை ஒரு பிரசுரமாக வெளிவுள்ளேன்       

                     

 நானும் ஹலீம் எம்.பியும் பாராளுமன்றத்தில் கூட்டம் கூடி, அதிகாரிகளை வரவழைத்து இதுபற்றிய வேலைகளைத்தான் ஆறு ,ஏழு வருடங்களாக செய்கின்றோம். இதற்கு விஞ்ஞான ரீதியில் முடிவு எடுப்பது மிக மிக அவசியமாகும். அதேவேளை, மார்க்கட் கட்டிடத்தை உடைத்து புதிய கட்டிடம் கட்ட 500 மில்லியன் ரூபாவை அப்போதைய எனது அமைச்சினூடக ஒதுக்கினோம்.  அப்போதைய ஆளுநருடன் சேர்ந்து அதை தடுத்து விட்டார்கள் 


இவ்வாறு    முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்    ஹக்கீம் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.