சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்
“ செப்டெம்பர் 22ஆம் திகதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது, இருவரில் ஒருவர் (சஜித் பிரேமதாச அல்லது அனுரகுமார திஸாநாயக்க) இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார் ” என சர்வதேச நடப்பு விவகாரங்கள் சஞ்சிகை, தி டிப்ளோமேட் இலங்கை பற்றிய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் “டெக்கான் ஹெரால்ட்” கருத்துக் கணிப்புகளை மேற்கோள் காட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் NPP இன் அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி இருப்பதாக தெரிவித்துள்ளது, “சஜித் மற்றும் அனுர ஆகியோர் தலா 35 சதவீத வாக்குகளைப் பெற முடியும், அதே நேரத்தில் ரணில் விக்கிரமசிங்க 24-25 ஐப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.”
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இரண்டாவது விருப்பு வாக்குக்கு இந்தத் தேர்தல் செல்லலாம் என பல சர்வதேச தகவல்கள் கணித்துள்ளன.
Post a Comment