Header Ads



இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்


இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தெற்கு லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபா, கலிலி, கோலன் மற்றும் நாசரேத் ஆகிய இடங்களில் வான்வழி ஊடாக பல ஷெல் மற்றும் ரொக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.


இந்நிலைமையைக் கருத்திற் கொண்டு அவ்வப்போது மேற்கொள்ளப்படும் இந்த தாக்குதல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் அறிவித்துள்ளார்.


பாதுகாப்பு சத்தம் எழுப்பப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், ​​இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான வீடுகளுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

1 comment:

  1. பெரிய விவசாயப் பண்ணைகளில் பணி செய்யும் இலங்கைத் தொழிலாளர்கள் ஷெல்கள் வந்து பண்ணைகளிலும் திறந்த வௌிகளிலும் பணி செய்யும் இலங்கைத் தொழிலாளர்கள் எந்த நேரமும் ஷெல்கள் வருவதை வானத்தைப்பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். அப்படி ஷெல்கள் வந்தால் உடனடியாக அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்று அபயம் கேட்டால் அவர்களின் உயிர் காப்பாற்றப்படும் என்பது இஸ்ரவேலில் உள்ள இலங்கைத் தூதுவரின் ​ஆலோசனை. மிக அருமையான ஆலோசனை!

    ReplyDelete

Powered by Blogger.