Header Ads



உடனடியாகவே பிரார்த்தனை அங்கீகரீக்கப்பட்டவரின் வாக்குமூலம்


ஸவூதி அரேபியா அல்கஸீம் நகரைச் சேர்ந்த ஸாலிஹ் அல்குழைபி என்ற வயோதிபர்  தனது நோயுற்றிருந்த ரியாத் நகரில் வசிக்கும் மகனை பார்க்க சென்று வருகிறார்.


வழியில் தனது கார் பழுதடைகிறது  அதனை திருத்துனரிடம் கொடுத்து விட்டு பக்கத்தில் இருந்த விளையாட்டரங்கில் இடம் பெறும்  ஒரு கால்பந்தாட்ட போட்டியை பார்க்க 10 ரியால் டிக்கெட்டை வாங்கி பார்வையாளர் அரங்கில் அமர்ந்து கொள்கிறார்.


சற்று நேரத்தில் அருகில் இருந்த இளைஞர்கள் அவரை தட்டி பெரியவரே உங்கள் படம் திரையில் காண்பிக்கப்படுகிறது, உங்களை மைதானத்திற்கு அழைக்கிறார்கள்  நீங்கள் வாங்கிய டிக்கட்டிற்கு கார் ஒன்றை பரிசாக வென்றிருக்கிறீர்கள் என்றார்களாம்.


மகிழ்ச்சியில் கண்ணீர் வடித்தவாரு  பரிசினை பெற்றுக் கொள்கிறார்.


தனது (படத்தில் உள்ள) கார் பழுதடைந்த நிலையில் கவலையோடு அல்லாஹ்வின் உதவியை வேண்டியவனாக பார்வையாளர் அரங்கில் அமர்ந்திருந்ததாகவும், தனது பிரார்தனை உடனடியாகவே அங்கீகரீக்கப் பட்டதனை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்ததாகவும் அவர் ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார்.


நிர்க்கதி நிலையில் உள்ளோர் பிரார்தனைகள் அல்லாஹ்வினால் அஙகீகரிக்கப்படுவதற்கான அருகதைகள் இருந்தால் அற்புதங்களும் நிகழலாம் அல்லவா!


எல்லாம் வல்ல அல்லாஹ் எமது துஆக்களையும் அங்கீகரித்து அருள்புரிவானாக, நிர்க்கதி நிலையில் உள்ளோருக்கு அவனன்றி யார்தான் துணை நிற்க முடியும்.


இது 2019 ஆண்டு நடந்த சம்பவம், இன்று மீண்டும் எனது பார்வையில் பட்டது.

மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்

No comments

Powered by Blogger.