Header Ads



புத்தளம் - வாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கை


எமது தாய்த்திருநாட்டின் புதிய அரசியல் தலைமை தங்களது பல வருட தியாகத்தின் மத்தியில் புதிய பரிணாமத்தின் அடிப்படையில் தலைமை வகித்து அரியணை ஏறியுள்ளது. மாஷா அல்லாஹ்   

                                                                                                                                                                                    இச்சந்தர்ப்பத்தில் காத்திரரமாகவும் தூரநோக்காகவும் எமது பயணம் தொடர வேண்டியது காலத்தின் தேவையாகும். இந்த நிலையில் இப்போது பாராளுமன்ற தேர்தல் எமக்கு சவாலானதாக அமைந்துள்ளதை காணலாம். காரணம் எமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றவும் எமக்கான பாராளுமன்ற பிரதிநிதியைப் பெறவும் எதிர்கால அபிவிருத்தி மற்றும் ஏனைய நலன்களை அடையவதுமாகும்.      


 எனவே இச்சந்தர்ப்பத்தில் நாம் அரசியலுக்கு அப்பால் பரந்துபட்ட சிந்தனையில் எங்களது பயணத்தை அமைக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.. 


எனவே பொதுவான தீர்வுத்திட்ட நகல்வுகளுக்கு ஏற்பவும் அரசியல் நிலைமைக்கு முகம்கொடுத்தும் பயணிக்க வேண்டியதாக உள்ளது. 


எனவே எமது உம்மத்துக்கள் முஹாஜரீன்கள் அன்சாரிகள் என ஈமானின் சமூகமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். அன்புள்ளம் கொண்ட ஒருவரை ஒருவர் புரிந்து நடக்கவேண்டிய சகோதரர்களாகவும் உள்ளோம். ஆகையாலும் அல்லாஹ்வின் அருளும் கிருபையும் இருப்பதனால் புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்து அல்லாஹ்விடம் பிரார்த்தித்து ஒற்றுமையாக செயற்படுவோம்.  


எனவே தற்போதைய சூழலில் பல அரசியல் கட்சிகள் போட்டி போடுவதால் நாம் பிரிந்து இயங்கினால் எமக்கான  பிரதிநிதியை பெறுவது சாத்தியமற்ற விடயமாகும். 


எனவே எமது பயணம் பரந்துபட்ட தூர நோக்கான பயணமாக இருப்பதால் இதுவிடயமாக ஒன்று பட்டு தீர்வுகளை கலந்தாலோசித்து பயணிக்க வேண்டிய உள்ளது. இதன் போது விட்டுக்கொடுத்து சகிப்புத் தன்மையுடன் ஒறறுமைப்படவேண்டிய தருணமாகும்.   


தாங்கள் வாழும் பகுதிகளில் கட்சியாகவும் தனியாகவும் சமூகநிறுவனங்களாகவும் இயங்கிக்கொண்டிருப்பவர்கள். சமுக சிவில் அமைப்புக்களும். ஜம்மியதுல் உலமாக்களும்  முகப்படுத்தப்பட ஒரு அணியாக ஒன்றிணைவோம்.  


எனவே காலத்தின் தேவைகருதியும் எமது இருப்புக்கு ஏற்ற அரசியல் களத்தை உருவாக்க வேண்டியுள்ளது.நாம் இதற்கு ஏதுவாக செயற்பட்டு தீர்வுத்திட்ட நகல்விடயமாக முன்மொழிந்து பயணிக்க சிவில் சமூகம் சார்பாக வேண்டுகின்றோம்.    இந்த செயற்பாடு தேர்தலுக்கு மட்டும் ஒன்றிணைவதாக அல்லாமல் எதிர்வரும் காலங்களில் இதனுடனான அனைத்து பரந்துபட்ட விடயங்களிலும் செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.   


எனவே இச்சந்தர்ப்பத்தில் பல்வேறு வடிவங்களில் இந்த சமூகவிடியலுக்காக பாடுபடும் ஒவ்வொரு  சமூக ஆர்வலர்களாக கொண்டு செயற்பட்டு அமைப்புக்களுக்கு இத்தகவலை அறியத்தருகின்றோம். 


இது விடயமாக இடம்பெயர்க்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழும் எமது அமைப்பு ரீதியான உறவுகளுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் ஆரோக்கியமான  ஒத்துழைப்புக்களை வழங்குங்கள் .


 எமது சமூகத்திற்காக எமக்கான உரிமைக்குரலை ஒரணியாய் முன்வைப்போம். இது காலத்தின் தேவையுமாகும்.  


 இதற்கு ஏதுவாக சகல தரப்புக்களையும் உள்வாங்கி அவர்களுக்கான பிரதிநிதிகளையும் வழங்கி ஒருமுகப்படுத்துவது இன்றியமையாத ஒன்றாகும். இதன்மூலமாக அந்தந்த பகுதிகளின் பிரதிநிதிப்படுத்தலினால் முழுமையான வாக்கு வங்கியை அதிகரிக்க முடியும்.   

                                                                                          எனவே மேலான எமது தூய இஃலாஸான பணியை அல்லாஹ்விற்காக செய்து மேலான பொருத்தத்தையும் அருளையும் பெற்று எமது இறுதி முடிவுகளை நலவாக்கி தந்தருள்வானாக என வேண்டுகின்றோம்.  


 புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி வெயேற்றப்பட்ட சிவில் சம்மேளனம்.                             


தலைவர்.              மாலிக் மெளலவி. 

செயலாளர்  .     ஹஸன் பைறூஸ்

No comments

Powered by Blogger.