Header Ads



அப்துர் ரஊப் தரப்பின் ஆதரவு இம்முறை ரணிலுக்கு


'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியின் கல்குடா மற்றும் ஓட்டமாவடி பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (08) முற்பகல் காத்தான்குடி-05 பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தார்.


அங்கு அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நிதியத்தின் தலைவர் அப்துர் ரஊப்  மிஸ்பாஹி உட்பட அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ. எல். எம். அதாவுல்லா, அலி சாஹிர் மௌலானா மற்றும் முன்னாள் பிரதி மேயர் எம். எம். ஜசீம் ஆகியோர் இதன்போது இணைந்திருந்தனர்.


பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலின்  கீழ் 02 ஜும்மா பள்ளிவாசல்கள் உட்பட 04 பள்ளிவாசல்கள் 07 குர்ஆன் பாடசாலைகள், 02 அரபிக் கல்லூரிகள் மற்றும் 30 இற்கும் மேற்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.


பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காத்தான்குடி நகர வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.


ஊடகப் பிரிவு

ரணில் 24 - இயலும் ஸ்ரீலங்கா

08-09-2024


No comments

Powered by Blogger.