Header Ads



அரசியல் வாழ்விலிருந்து முற்றாக விலகுகிறார் அலி சப்ரி


தாம் இப்போது அரசியல் வாழ்விலிருந்து விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 


தனது X பக்கத்தில் இட்ட பதிவொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


எனது பொதுக் கடமைகளை நான் முடித்துக் கொண்டு, எனது முயற்சிகளுக்கு ஆதரவளித்த, வழிகாட்டிய, ஆக்கபூர்வமாக விமர்சித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். உங்கள் நம்பிக்கையும் ஊக்கமும் தான் என்னை இந்த பயணம் முழுவதும் தாங்கிய தூண்கள்.


நான் இந்த அத்தியாயத்தை மூடும்போது, இந்த சேவையின் காலத்தின் பாடங்களையும் நினைவுகளையும் எப்போதும் என்னோடு சுமப்பேன். இனி வரும் நாட்களில் இலங்கை தனது முழு ஆற்றலையும் பூர்த்தி செய்யும் என்று உங்கள் அனைவரையும் போல நானும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். 

2 comments:

  1. இவர் பதவியில் இருந்தார், அல்லது விலகிவிட்டார் என்ற இரண்டிலும் முஸ்லிம் சமூகத்துக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை. எனவே அதுபற்றி நாம் யாருக்கும் எந்தக் கவலையும் கிடையாது. காலுக்கும் கைக்கும் இருந்த பாதுகாப்பும் படைகளும், அரசின் சுகபோகங்களும், ஆரம்பரமான வாழ்க்கையும் உடன் இழந்து போனது உங்களுக்கு கடும் கவலை என்பது எமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் முஸ்லிம் சமூகத்துக்கு உங்களைப் போன்ற புல்லுருவிகள் அவசியமில்லை.

    ReplyDelete

Powered by Blogger.