இலங்கை வானொலி, தொலைக்காட்சி முதலாவது முஸ்லிம் பெண் அறிவிப்பாளர் காலமானார்
இலங்கை வானொலியில் செய்தி வாசித்த முதல் முஸ்லிம் பெண்ணான ஆயிஷா ஜுனைதீன் தனது 74 ஆவது வயதில் காலமானார்.
முஸ்லிம் சேவை முதல் பணிப்பாளர் வி.ஏ .கபூரின் சிபார்சில் முதன் முதலாக “பிஞ்சு மனம்” சிறுவர் நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பை பெற்ற ஆயிஷா ஜுனைதீன், சிலாபம் மாதம்பை பழைய நகரிலிருந்து வானொலிக்குள் பிரவேசித்து, முஸ்லிம் சேவையின் முதல் பெண் தயாரிப்பாளரானார்.
இலங்கை வானொலியில், செய்தி வாசித்த முதல் முஸ்லிம் பெண் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையும் தொலைக் காட்சியில் செய்தி வாசித்த முதல் முஸ்லிம் பெண் மற்றும் அறிவிப்பாளர் என்ற பெருமையும் இவரையே சாரும்.
Post a Comment