தம்மை இஸ்லாமியராக கருத முடியாது என்ற ,அயதுல்லா அலி கொமேனிக்கு இந்தியா கண்டனம்
இந்தியாவில் சிறுபான்மையினர் நிலை குறித்து ஈரான் மதகுரு அயதுல்லா அலி கொமேனி தெரிவித்த கருத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரான் மத்ததலைவர் அயதுல்லா அலி கொமேனி சமூக வலைதளமான ‛எக்ஸ்' வலைதளத்தில் கருத்து ஒன்றை பதிவேற்றினார். இதில் மியான்மர், காசா, இந்தியா உள்பட எந்த நாட்டிலும் சிறுபான்மையினர் அனுபவிக்கும் துன்பங்களை நாம் கவனிக்காமல் இருந்தால் நம்மை இஸ்லாமியராக கருத முடியாது என பதிவிட்டுள்ளார்.
கொமேனியின் கருத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறுிக்கையில், ஈரான் மத தலைவர் கொமேனி இந்தியாவில் சிறுபான்மையினர் குறித்து தவறான தகவலை தெரிவித்துள்ளார். அவரது கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. பிற நாடுகளில் சிறுபான்மையினர் நிலை பற்றி கருத்து சொல்லும் நாடுகள், முதலில் தங்கள் நாட்டில் என்ன நிலைமை என்பதை ஆராய்ந்து பார்த்துவிட்டு கருத்துச் சொல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment