லெபனானில் உள்ள இலங்கையர்களின் நிலை என்ன..?
இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்புடன் இருப்பதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேலில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலை தொடர்பிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், பெய்ரூட் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தூதரகங்கள் விழிப்புடன் செயல்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய போர் சூழ்நிலையால் இலங்கையர்கள் எவரும் இதுவரை பாதிக்கப்படவில்லை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் எங்கு வேலை செய்தாலும் அவர்கள் பாதிப்புக்கு உற்பட மாட்டார்கள். அவர்களுக்கு சரியான பாதுகாப்பும், நிலையான இடங்களும் கிடைக்கும் என்பது தான் இஸ்ரவேலில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை வௌிநாட்டு அமைச்சின் அறிக்கை.
ReplyDelete