வெனிசுலா ஜனாதிபதியின் சொகுசு விமானத்தை பிடித்துக் கொண்ட அமெரிக்கா
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு சொந்தமான சொகுசு விமானத்தை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.
இந்த விமானம் மோசடியாக வாங்கப்பட்டு அமெரிக்காவிலிருந்து கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேற்படி விமானம் டொமினிகன் குடியரசில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டதுடன், இதன் பெறுமதி இலங்கை ரூபாயில் 400 கோடி என தெரிவிக்கப்படுகின்றது.
2022 ஆம் ஆண்டின் பிற்பகுதி மற்றும் 2023 ஆம் ஆண்டின் முற்பகுதிக்கு இடையில், மதுரோவுடன் தொடர்புடையவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து இந்த சொகுசு விமானத்தை வாங்கியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post a Comment