அனுரகுமாரவிற்கு முஸ்லிம்கள் எப்படி வாக்களிக்க முடியும்..? பிரசன்ன ரணதுங்க
நாட்டை அராஜகத்திலிருந்தும், இனவாதம் மற்றும் மதவாதத்திலிருந்தும் விடுவிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மதவாதத்தையும் இனவாதத்தையும் நிராகரித்த தலைவர் எனவும், எனவே சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்யும் மேடையில் கைகோர்த்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்ட முஸ்லிம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
“நாடு மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் ஒருபோதும் பாராளுமன்றம் சென்றதில்லை. இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
கம்பஹாவில் எமது ஜனாதிபதி தேர்தல் மேடையில் சிங்களம், தமிழ், முஸ்லிம், நீல சிவப்பு பச்சை என அனைத்துமே உள்ளன. நாட்டை அராஜகத்திலிருந்து காப்பாற்றவே இந்த ஒன்றிணைவு நடந்தது. இனவாதம் மற்றும் மதவாதத்திலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டும். இந்தப் பிரிவினையை உருவாக்காவிட்டால் சில தலைவர்கள் ஆட்சிக்கு வர முடியாது. இனவாதத்தையும் மதவாதத்தையும் இல்லாதொழித்த தலைவர் ரணில் விக்கிரமசிங்க. அதனால்தான் அனைத்து சிங்கள முஸ்லிம் தமிழர்களும் அவருடைய மேடையில் இருக்கிறார்கள். இன்று எமக்கு புதிய அரசியல் மேடை கிடைத்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் அனுரகுமாரின் உரையை கேட்ட முஸ்லிம்கள் அவருக்கு எப்படி வாக்களிக்க முடியும்? எனவே சந்தர்ப்பவாத அரசியலை நிராகரிப்பதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தலில் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது” என்றார்.
Post a Comment